சீனாவில் கடும் மாசு ஏற்படுத்தும் நிறுவனத்தின் சரிபார்ப்பு
cri
சீனாவில் அண்மையில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பல்வகை விபத்துக்கள் நிகழ்ந்ததை அடுத்து, மிக மோசமாக மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளில் இருந்து மாசுக்கழிவு வெளியேறும் பிரச்சினை முழுமூச்சாகத் தீர்க்கப்படும் என்று சீனாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தலைமை பணியகத்தின் அதிகாரி Chen Shan Rong கூறியுள்ளார். விரைவில் நாடளவில் படிப்படியாக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்கான சிறப்பு திட்டங்களை விரிவாக செயல்படுத்துமாறு மாநில அரசாங்கங்கள் வற்புறுத்தப்படும் என்றார். குடிநீர் ஆதாரங்களுக்கு அச்சுறுத்தலாக, சட்டவிரோதமாக கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ரசாயன தொழிற்சாலைகளின் மாசு உண்டாக்கும் கழிவுகளை கட்டுப்படுத்த முன்னுரிமை தரப்படும் என்றும் அவர் கூறினார். ஜுன் திங்களின் இறுதி வரை, சுமார் 2500 மாசுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
|
|