• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-10 15:37:12    
சீனாவில் இந்திய வாசனை

cri
முனுசாமி ஞானவேலு செட்டியார் கடந்த பதினைந்து ஆண்டுகளாக சீன வாழ்க்கைக்கு-சீன உணவுக்கு வாசனை ஊட்டிவரும் மசாலா மன்னர். 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கட்டிடத் தொழிலாளியாக சீனாவுக்கு வந்த இவர், வருமானம் போதாமல் மாலை நேரங்களில் சீனர்களுக்கு ஆங்கிலப் பாடம் நடத்தி சம்பாதித்தார். இன்றைக்கோ சீனா முழுவதும் 22 இந்திய உணவகங்களை நடத்தி வருகிறார். சீனாவுக்குத் தேவைப்படும் இந்திய மசாலாப் பொருட்களில் 90 விழுக்காட்டை இவர் வழங்குகிறார். இந்தியன் கிச்சன் மேனேஜ்மென்ட் லிமிட்டெட், இந்தியன் கிச்சன் மசாலா நிறுவனம், இந்தியன் கிச்சன் மளிகைக் கடை நிறுவனம் என்று சீனா முழுவதும் இந்திய மசாலா மணத்தைப் பரப்பும் பல கோடி டாலர் வர்த்தகக் குழுமத்தை உருவாக்கியுள்ளார்.

இப்படியொரு சங்கிலித்தொடர் நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எதனால் வந்தது? இந்தக் கேள்விக்கு வயிறு குலுங்க சிரித்துக் கொண்டே பதில் தருகிறார் ஆன்ட்டனி என அழைக்கப்படும் முனுசாமி ஞானவேல் செட்டியார்.

"கே எஃப் சி, மெக்டனால்டு என்பவை போன்ற உணவகங்கள் தங்களது உணவுக் கலாச்சாரத்தை உலகெங்கும் பரப்பும் போது, இந்திய உணவை ஏன் பரப்பக் கூடாது?"

சீனாவின் மகத்தான பொருளாதார வளர்ச்சியினால், சீன நுகர்வோர்கள் தங்களுக்கு புதிதாகக் கிடைத்துள்ள செலவிடும் சக்தியை புதிய பண்டங்களிலும், சேவைகளிலும், உணவுகளிலும் பயன்படுத்துகின்றனர். "புதிது புதிதாக என்னென்ன வருகிறதோ, அவற்றை எல்லாம் அனுபவிக்க சீன மக்கள் விரும்புகின்றனர். என வேதான் சீனா முழுவதும் பன்னாட்டு உணவகங்கள் பரவத் தொடங்கி விட்டன.

ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் ஒரு சில காப்பிக் கடைகளே இருந்தன. இன்றோ, சீனாவின் எந்தப் பகுதிக்கு நீங்கள் போனாலும், ஒவ்வொரு சின்ன நகரிலும் கூட ஒரு காப்பிக்கடை இருக்கிறது. ஒரு மெக்டொனால்டு, ஒரு கே எஃப் சி, ஒரு பிஸ்ஸா ஹட் இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் ஒவ்வொரு சீன நகரிலும் விற்பனை உரிமை பெற்று இயங்கும் இந்தியன் கிச்சன் உணவகங்கள் காணப்படும் நிலை வரவரம் என்று கூறுகின்றார் 54 வயதான முனுசாமி ஞானவேல் செட்டியார்.

சீனாவில் சர்வதேச உணர்வு பரவி வருவதால், இந்திய உணவு வகைகள் செழித்தோங்கக்கூடிய ஒரு முக்கிய வட்டாரமாகச் சீனாவை ஆக்குவதில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளார் இவர். "உலகில் எந்த ஒரு நகரமும் சர்வதேசத்தரம் பெற வேண்டுமானால் அங்கே இத்தாலிய உணவும், சீன உணவும், இந்திய உணவும் கட்டாயம் கிடைக்க வேண்டும்" என்று திட்டவட்டமாகக் கூறுகிறார். இந்த உறுதியான நம்பிக்கைக்குக் காரணம் உண்டு, இத்தாலிய உணவையும், சீன உணவையும், இந்திய உணவையும் உலகெங்கும் உள்ள மக்கள் பாராட்டி ஏற்றுக்கொண்டுள்ளனர். வளர்ந்து வரும் சீனாவிலும் பெய்சிங் போன்ற பெரிய நகரங்கள் சர்வதேசத் தரத்தை எட்டிப் பிடிக்கும் நிலையில் உள்ளன. பல சீன நகரங்கள் இன்னமும் சர்வதேசத் தரத்திற்கு உயரவில்லை. ஆனால் அந்த நிலைமையை அடைய விரும்புகின்றன. இப்படிப்பட்ட நிலைமை ஒரு வணிகருக்கு மிகவும் பொருத்தமானது என்கிறார் இந்தியன் சிச்சன் உரிமையாளர்.