• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-10 18:56:28    
நோயாளிகளுக்கு அக்கறை செலுத்தும் தொண்டர்கள்

cri
கலை..... சாதாரண மக்களால் நிறைவேற்ற முடியாத முயற்சிகளை சுன்தான் மருத்துவ மனை நிறைவேற்ற முடியும். இது செயல்படத் துவங்கிய பின் மொத்தம் 17000க்கும் அதிகமான நோயாளிகள் இந்த மருத்துவ மனையில் தங்களின் கடைசி வாழ்க்கையை கழிந்தனர். அவர்களின் சராசரி வயது 82 ஆகும். மூத்தவரின் வயது 109. மிக சிறியவனின் வயது 4 நாள் மட்டுமே.

ராஜா........இத்தகைய தனித்தன்மை வாய்ந்த சூழ்நிலையில் இந்த மருத்துவ மனையின் செயல்படும் முறை சிந்தனைக்கும் அப்பாற்பட்டது.

கலை........ஆமாம். சிறப்புத் தேவை உள்ள மக்களுக்கு எப்படி சேவை செய்வது என்பது மருத்துவ மனையின் தொடக்க நாளில் இருந்தே கண்டிப்பான முறையில் கவனிக்கப்பட்டுள்ளது.

ராஜா........எனக்கு தெரிந்த வரை, 24 மணி நேரம் எந்த நேரத்திலும் தேவைபட்டால் டாக்டர்களும் செவிலியர்களும் உடனே நோயாளியிடம் வருவார்கள். ஒவ்வொரு நோயாளி கூடத்திற்கும் ஒரு உதவியாளர் இருக்கிறார். அவர் 24 மணி நேரமும் நோயாளிகளுடனே வாழ்கின்றார். முதியோரை பாதுகாக்கின்றார்.

கலை.......நீங்கள் சொல்வது சரிதான்.

ராஜா......நான் சொன்னதை நம்பாவிட்டால் செவியியல் லீ சொல்வதைக் கேளுங்கள்.

 

கலை........ எங்கள் உதவியாளர்கள் நாள்தோறும் காலை 5 மணிக்கு எழுந்து முதியோரைக் குளிப்பாட்டி, உணவு கொடுத்து, உண்பதற்கு உதவி செய்கின்றனர். நடக்க முடியாத முதியோர்களை உதவியாளர்கள் சுமந்து கொண்டு கட்டிடத்திற்கு வெளியே எடுத்து செல்கின்றனர். படுத்த படுக்கையாக உள்ள நோயாளரிகளைப் பொறுத்தவரை மணிக்கு ஒரு தடவை அவரை படுக்கையில் புரண்டு படுக்க வைக்கின்றனர். முதுகெலும்பை தடவிக் கொடுத்து மசாஜ் செய்கிறார்கள்

ராஜா.........சுன் தான் மருத்துவ மனை நிறுவப்பட்ட பின் பொது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் நோயாளிகளுக்கு அன்பு காட்டுவது தவிர வேறு ஏதேனும் தனிச் சிறப்பு உண்டா?

கலை.......உண்டு. இதுவரை 200க்கும் அதிகமான உயர் நிலைக் கல்வி நிலையங்களும், சமூக நிறுவனங்களும் மருத்துவ மனையுடன் நீண்ட காலமாகத் தொடர்பு கொண்டுள்ளன. அவற்றின் தொண்டர்கள் அடிக்கடி மருத்துவ மனைக்கு வந்து நோயாளிகளுக்கு நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகின்றனர். நோயாளிகளுடன் பேசி அவர்களின் தேவைக்கு ஏற்ப உதவி செய்கின்றனர். நோயாளிகள் தங்களுடைய வாழ்க்கையின் கடையி கட்டத்தில் சமூகத்தின் உதவியை பெற்று மிகவும் இன்பமாக உணர்கின்றனர். முதியோரின் அறையில் உதவி செய்கின்ற தொண்டர் ஒருவர் இது பற்றி கூறுகிறார்.

 

ராஜா........நான் சராசரியாக வாரத்துக்கு ஒரு முறை மருத்துவ மனைக்கு வருகின்றேன். ஒரு பாட்டியுடன் நான் அடிக்கடி பேசுகின்றேன். அவர் வாய் ஓயாமல் பேசுகிறார். அவருடன் பேசுவது எனக்கு மகிழ்ச்சி தருகின்றது. மறுபுறம் நான் பாட்டியிடமிருந்து அனுபவ அறிவை பெறுகிறேன்.

கலை.......புற்றுநோயினால் துன்பப்படும் இந்த 91 வயதான பாட்டி லீ பேசுகிறார்..

நான் இங்கே பல நாட்களாக தங்கியிருக்கிறேன். சொந்த வீடாகக் கருதி குடும்பத்தில் ஒருவராக நான் இங்கு வாழ்கின்றேன். எனக்கு மிக மகிழ்ச்சி. நோயின் துன்பத்தை நான் உணர வில்லை

 

ராஜா.......சீனாவில் இப்போது 13 கோடி முதியவர்கள் வாழ்கின்றனர். இது மக்கள் தொகையில் 10 விழுக்காடாகும்.

கலை........ஆகவே முதியோர் குறிப்பாக சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னும் குணமடையாத நோயாளிகளை எப்படி காபாற்றுவது என்பது சீன சமூகத்தின் பல்வேறு துறைகள் கவனம் செலுத்தும் பிரச்சினையாகியுள்ளது.

ராஜா.......சுன் தான் மருத்துவ மனை போல இப்போது 100க்கும் அதிகமான சமூக அமைப்புக்கள் இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளன. எதிர்காலத்தில் மேலும் கூடுதலான மக்களும் நிறுவனங்களும் ஈடுபடும் என நம்புகின்றோம்.