ராஜா.......அப்புறம் என்ன செய்ய வேண்டும்?
கலை....... வேகவைக்கப்பட்ட பூசணிக் காயை தட்டில் வைத்து ஆறவிட வேண்டும்.
ராஜா...... பூசணிக் காய் ஆறிய பின் என்ன செய்ய வேண்டும்?
கலை......முதலில் கோதுமை மாவு தேவை என்று சொன்னோம் இல்லையா? பாத்திரத்தில் பூசணிக் காயை நன்றாக பிசைய வேண்டும். பிசையும் போது கோதுமை மாவை லேசாக பூசணிக் காயின் மேல் தூவ வேண்டும். கோதுமை மாவு கலந்து பூசணிக் காயை நன்றாக பிசைய வேண்டும். பின் 20 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
ராஜா........முன்பு நாம் குறிப்பிட்ட நல்லெண்ணெய், சர்க்கரை இரண்டையும் எப்போது சேர்க்க வேண்டும்?
கலை......கவலைப்படாதீர்கள். கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாகத் தூவும் போது சர்க்கரையும் சேர்த்து தூவலாம். உடனே நல்லெண்ணெயையும் உள்ளே விட்டு நன்றாக பிசைய வேண்டும்.
ராஜா.......எனக்கு புரிந்தது. சர்க்கரை, நல்லெண்ணெய் கோதுமை மாவு ஆகியவற்றை சிறிது சிறிதாக பூசணிக் காயுடன் கலந்து பிசைய வேண்டும். சிலருக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும். அப்போது கூடுதலான சர்க்கரை உள்ளே தூவலாமா?
கலை.......இது பற்றி கவலைப்படத் தேவையில்லை. உங்கள் விருப்பத்தின் படி உள்ளே சர்க்கரை சேர்க்கலாம். ஆனால் உடல் ஆரோக்கியத்திற்காக இனிப்பு குறைவாக இருந்தால் நல்லது.
ராஜா.......சரி. தொடர்ந்து செய்முறை விவரியுங்கள்.
கலை.........ஊறிய பூசணிக் காய் மாவை கொண்டு சிறுசிறு வடை போல் தட்ட வேண்டும். உருண்டையாக செய்து பூசணிக் காய் வடிவத்தில் உருவாக்க லாம். தனித்தனியாக பூசணிக் காய் வடைகளை உருவாக்கிய பின், வாணலில் அரை கிலோ உணவு எண்ணெய் ஊற்றுங்கள்.
ராஜா.......எண்ணெய் அதிகமாக சூடாக வேண்டுமா?
கலை......முதலில் தீ தணிவாக எரியட்டும். வாணலியில் எண்ணெய் பாதி சூடானதும் பூசணிக் காய் வடைகளை ஒவ்வொன்றாக வாணலியில் போட்டு பொலியுங்கள். மெதுவாக எண்ணெயில் போடுங்கள். இல்லா விட்டால் மேலே சூடான எண்ணெய் சிதறும்.
ராஜா.........இரண்டு பக்கங்களும் தங்க நிறமாக வடை பொறிந்த பின் என்ன போட வேண்டும்? உணவு விடுதியில் தின்ற பூசணிக் காய் வடையின் மேல் ஏதோ தூவப்பட்டிருந்ததே.
கலை........ வடை நன்றாக பொறிந்த பின் தட்டில் வைத்து அதன் மேல் வெள்ளை எள் gingeli தூவ வேண்டும்.
ராஜா......இதனால் என்ன பயன்?
கலை.......பார்ப்பதற்கு அழகாகவும் தின்பதற்கு சுவையாகவும் இருக்கும். உடல் நலனுக்கும் நல்லது.
ராஜாஜ......சரி எனக்கு புரிந்தது. விடுமுறை நாட்களில் இதை சோதனை முறையில் நான் செய்து பார்ப்பேன்.
கலை.......முயற்சி செய்யுங்கள்.
ராஜா........நண்பர்களே எங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டு சமைத்து ருசி பாருங்கள். பிறகு ஒரு வரி எழுதுங்கள்.
|