• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-09 20:56:15    
தென்மேற்கு சீனாவில் ஆசியானின் முதலீடு

cri

கடந்த நூற்றாண்டின் 70ம் ஆண்டுகள் முதல், ஆசியானின் பல்வேறு உறுப்பு நாடுகளிலுள்ள சீன வணிகர்கள், சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியுள்ளனர். முன்பு, பொருளாதாரம் வளர்ச்சி அடைந்த கிழக்கு பகுதியின் கடலோர வட்டாரங்களில், அவர்கள் கவனம் செலுத்தி முதலீடு செய்தனர். கடந்த சில ஆண்டுகளாக, வளர்ச்சி குன்றிய தென்மேற்குப் பகுதியில் அக்கறை காட்டி வருகின்றனர்.

25 லட்சத்துக்கு கூடுதான சதுரகிலோமீட்டர் பரப்பளவுடைய இப்பிரதேசத்தில் சுமார் 25 கோடி மக்கள் வாழ்கின்றனர். சிசுவான் மாநிலம், குவாங்சி சுவாங் இன தன்னாட்சி பிரதேசம், சுங் ச்சிங் மாநகரம், யுன்னான் மாநிலம் உள்ளிட்ட 6 மாநில நிலை வட்டாரங்களை உள்ளடக்கிய தென்மேற்குப்பகுதி, சீனாவின் முக்கிய மூலவளமிக்க இடமாகவும், தொழில் துறைக்கான எரியாற்றல் தளமாகவும் திகழ்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, இப்பிரதேசத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் பொருட்டு, சீன அரசு பெருமளவிலான நிதி ஆதரவு அளிப்பதோடு, வெளிநாட்டு முதலீட்டை, குறிப்பாக ஆசியானிலுள்ள சீன வணிகர்களின் முதலீட்டை ஈர்ப்பதை ஆக்கப்பூர்வமாக ஆதரிக்கிறது.

சீன அரசவையில் வெளிநாட்டு சீனர் விவகாரத்துக்குப் பொறுப்பான அலுவலகத்தின் துணை தலைவர் லீ ஹெய் பொஃங் அம்மையார், இது பற்றி விளக்கினார்.

கடந்த சில ஆண்டுகளாக, இப்பகுதியின் வளர்ச்சியையும் திறப்பையும் விரைவுபடுத்த, சீன அரசு பல சலுகைக் கொள்கைகளை வகுத்து நிறைவேற்றி, ஆதரவு அளவைப் பெருக்கியுள்ளது. முதலீட்டு சூழ்நிலையை மேம்படுத்தும் வகையில், உள்ளூர் அரசாங்கங்கள், நிதி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து அதிகரித்து, அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை வலுப்படுத்தி வருகின்றன. தென்மேற்கு பகுதியில், ஆசியானின் உறுப்பு நாடுகளிலுள்ள சீன வணிகர்களின் முதலீட்டுத் திட்டங்களும், முதலீட்டு அளவும் தெளிவாக அதிகரித்து வருகின்றன. வெளிநாடுகளிலுள்ள சீனர்கள், இப்பகுதியின் வளர்ச்சியில் முக்கிய ஆற்றலாக மாறியுள்ளனர் என்றார் அவர்.

சீன-ஆசியான் சுயேச்சை வர்த்தக மண்டலம் உருவாக்கப்பட்டதும், இரு தரப்புக்களுக்கிடையே நெருங்கிய பொருளாதார தொடர்பும், வர்த்தக உறவும் மேலும் வலுப்பட்டன. மூலவள கட்டமைப்பு, தொழில் கட்டமைப்பு, தொழில் மற்றும் வேளாண் உற்பத்தி பொருட்கள் ஆகிய துறைகளில், சீனாவின் தென்மேற்கு பகுதிக்கும், ஆசியானின் பல நாடுகளுக்கும் இடையில், வலுவான குறை நிரப்புத் தன்மை உள்ளதால், பொருளாதார வர்த்தக ஒத்துழைப்புக்கு மாபெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப் பின்னணியில், ஆசியானின் சீன வணிகர்கள், இப்பகுதியில் முதலீட்டை தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். ஓராண்டின் முதலீட்டுத்தொகை, கோடிக்கணக்கான அமெரிக்க டாலரை எட்டியது.

2003ம் ஆண்டு முதல், சீனாவில், ஆசியானின் சீன வணிகர்கள், தென்மேற்கு பகுதியில் முதலீடு செய்வதைத் தாண்டும் கூட்டம், ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. தற்போது, இக்கூட்டம், இரு தரப்பின் கூட்டு வளர்ச்சியை மேம்படுத்தும் முக்கிய முதலீட்டு ஒத்துழைப்பு மேடையாக மாறியுள்ளது, இது, ஆக்கப்பூர்வமான செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில், இது தொடர்பான 4வது கூட்டமும், ஆசிய-பசிபிக் சீன வணிகர்களின் கருத்தரங்கும் யுன்னான் மாநிலத்தின் தலைநகரான குவன்மிங்கில் நடைபெற்றது. வெளிநாட்டு சீன வணிகர்களின் 180 பிரதிநிதிகளும், தென்மேற்கு பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளும், இதில் கலந்துகொண்டனர். யுன்னான் மாநிலத்துக்கு, தென்கிழக்காசியா மற்றும் தெற்காசியாவுடன் இணையும் இயற்கையான மேம்பாடு உள்ளது. எதிர்காலத்தில், ஆசியான் நாடுகளுடன் வர்த்தக ஒத்துழைப்பை வளர்க்கும் பாலமாக யுன்னான் மாறும் என்று யுன்னான் மாநிலத்தின் துணை தலைவர் ச்சின் குவாங்ரோங் தெரிவித்தார்.