• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-09 22:30:10    
பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள்

cri

ஸ்பெயின் நாட்டு மேட்ரிட் நகரில் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 8ம் நாள் வரை பெண்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெறுகின்றன. இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு 12 அணிகள் பூர்வாங்க போட்டிகளில் விளையாடின. இங்கிலாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, சீனா, இந்தியா ஆகிய அணிகள் இடம்பெற்ற ஏ குழுவில் நெதர்லாந்தும்,ஸ்பெயினும் அதிக புள்ளிகள் பெற்றன. ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, கொரியா, தென் ஆப்பிரிக்கா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய அணிகள் அடங்கிய பி குழுவில் ஆஸ்திரேலியாவும், அர்ஜென்டினாவும் அதிக புள்ளிகள் பெற்றன. அணிகள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இரு குழுவிலும் தரவரிசையில் பிரிக்கப்பட்ட அணிகள் ஒரு குழுவோடு மற்ற குழுவின் அணிகள் விளையாடுவது என்ற நடைமுறைக்கு ஏற்ப கடந்த வெள்ளியன்று வரையில் நடைபெற்ற போட்டிகளில் இறுதி பந்தயத்திற்காக, அதாவது முதலிடத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள் இறுதி செய்யபட்டன. அதன்படி இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் நெதர்லாந்து வெற்றி பெற்றால் பெண்கள் ஹாக்கி உலக கோப்பையை 8 முறை வென்ற நாடாக நெதர்லாந்து சிறப்பு பெறும்.

பளுத்தூக்கும் போட்டிகள்:

டொமினிக்கன் குடியரசு நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலக பளுதூக்கும் சாம்பியன் பட்டப் போட்டிகளுக்கென மொத்தம் 79 நாடுகளைச் சேர்ந்த 569 பளுதூக்கும் வீரர்களும் வீராங்கனைகளும் கலந்துகொண்டுள்ளனர். ஆண்கள் பிரிவில் மொத்தம் 366 வீரர்கள் 73 நாடுகளை பிரதிநிதித்துவபடுத்த, பெண்கள் பிரிவில் 44 நாடுகளைச் சேர்ந்த 203 வீராங்கனைகள் போட்டியிடுகின்றனர். சீன பளுத்தூக்கும் அணி 15 பேர் கொண்டது. இந்த அணியில் 6 பேர் முதன் முறையாக சர்வதேச அளவில் பங்கேற்கின்றனர். 7 பெண்கள் 8 ஆண்கள் கொண்ட இந்த அணியில், பெண்கள் பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் லியு சுன் ஹொங், ஆண்கள் பிரிவில் உலக சாம்பியன் பட்டம் வென்ற சியு லே, ஷு ஸுயோங், லீ ஹோங்லி ஆகியோர் உள்ளனர்.

இது வரை நடைபெற்ற போட்டிகளின் முடிவுகளின் படி பெண்கள் பிரிவில் சீன வீராங்கனைகளுக்கும், ரஷ்ய வீராங்கனைகளுக்குமிடையில் கடும் போட்டி நிலைவியது என்றாலும் சீன பெண்கள் அதிக வெற்றிகளை பெற்று முன்னனியில் உள்ளனர்.