• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-11 11:33:36    
நேயர்களின் கடிதங்கள்

cri

வாணி: மறைமலைநகர் சி. மல்லிகதேவி எழுதிய கடிதம். சீன இந்திய நட்புறவுக்கு சீன வானொலியும் ஒரு முன் உதாரணம். கட்டுரை போட்டியின் தலைப்பும் இதே. சீன வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்பதே நட்புறவு என்று நினைக்கிறேன். தமிழநாட்டில் கருத்தரங்கு நடைபெறுவதும், சீன வானொலி நிலைய பணியாளர்கள் வருகை தந்து சிறப்பிப்பதும் ஒரு உறவே. தொலைபேசியில் தொடர்புகொண்டு சீன வானொலி அன்பர்கள் என்னைபோன்ற நேயருடன் பேசுவது உறவே. சீனாவும் இந்தியாவும் நட்புறவு நாடுபோல. நம் சீன வானொலி நிலைய பணீயாளர்களின் குடும்பமும் என் உறவினர்கள் போன்றவர்களே இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அன்பு நேயர் மல்லிகாதேவி அவர்களே, நீங்கள் சொன்னவற்றில் எங்களுக்கும் முழுமையான ஏற்பும் நமிக்கையும் உண்டு. நமது நேயர்களும் இதே கருத்தை ஆமோதிப்பார்கள் என்பது நிச்சயம். தங்கள் அன்பிற்கு நன்றிகள் பல.

க்ளீட்டஸ்: அடுத்து நீலகிரி கீழ்குந்தா அஞ்சல் நேயர் கே. கே. போஜன் எழுதிய ஜூன் 28ம் நாள் ஒலிபரப்பான கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி குறித்த கடிதம். நிகழ்ச்சியில் சென்னை நேயர் எஸ். ரேணுகாதேவியின் கேள்விக்கு தகுந்த பதில் கூறினீர்கள், நல்ல கருத்தாக இருந்தது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பழமை வாய்ந்த கலாச்சார உறவுகள் இருந்து வந்துள்ளன. இதற்கு அடையாளமாக இந்தியாவின் புத்தமதம் சீனாவுக்கு பரவியுள்ளது போல சீனாவிலிருந்து யுவான் சுவாங், பாஹியான் போன்ற தூதுவர்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். 2003ம் ஆண்டில் வாஜ்பாய் தலைமையமைச்சராக இருந்த நேரத்தில் சீனாவுக்கு பயணம் செய்து இரு நாட்டிற்கும் நட்புறவை வளர்த்தார், இதன் காரணமாக இன்றும் பல பிரச்சனைகளை பற்றி பேசிவருகின்றனர். சீனாவின் எல்லையைச் சுற்றி 14 நாடுகள் உள்ளன. இதில் ரஷியா, இந்தியா ஆகியவை முக்கியமானவை. கடந்த 44 ஆண்டுகளாக மூடப்பட்ட நாதுலா கணவாய் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே திறந்து விடப்படுவது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதன் பின்னர் இரு நாட்டுத் தலைவர்கள் இரு நாடுகளுக்கும் செல்வார்கள். இது போன்ற அரசுமுறை பயணங்கள் இரு நாடுகளுக்குமிடையே நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் என்பது உறுதி என்று எழுதியுள்லார்.

வாணி: அடுத்து புதுச்சேரி பாகூர் வானவில் ஆன்நந்த் எழுதிய அகடிதம். சீனத்தமிழொலியின் 11வது இதழ் கிடைத்தது. தி. கலையரசி அம்மையாரின் சிறப்பு நேயர் சிறப்பு பயணம் கட்டுரை பேரானந்தம் தந்தது. எஸ். எம். ரவிச்சந்திரனின் சீனப் பயணக்க் கட்டுரை என் மன வானில் எண்ண அலைகளை எழுப்பிவிட்டதுடன் விஜயலட்சுமி அவர்களின் கட்டுரையும் அற்புதமாக அமைந்திருந்தது. நண்பர்களுக்கு சீனத் தமிழொலியை அறிமுகம் செய்து மகிழ்ந்தேன் என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து இலங்கை காத்தான்குடி நேயர் ஏ. எல். எம். அர்சாத் எழுதிய கடிதம். நிகழ்ச்சிகளை தவறாது கேட்டு வருகிறேன். பயனுள்ள பல நல்ல தகவல்கள் வழங்கப்படுகின்றன. சீன நாட்டை பற்றித் தெரியாத பல செய்திகள் வானொலியினூடாக அறிகிறேன். அண்மையில் சீனாவில் ஏற்பட்ட இயற்கை அழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என் ஆழந்த அனுதாபங்கள். சீன மொழியை தமிழ் மொழி மூலம் கற்பிப்பது ஆர்வத்தை தூண்டி எனக்கும் சீன மொழியைக் கற்கும் ஆவல் ஏற்படுத்தியுள்ளது. கலை, கலாச்சாரம் குறித்த பல்வேறு தகவல்கள் கேட்பதற்கு இனிமையாக வழங்கப்படுவதை சீன வானொலி தொடர்ந்து செய்யவேண்டும் என்று கேட்டுள்ளார்.