மேலும் கூடுதலான வெளிநாட்டவர்கள் திபெத் பண்பாட்டை நேசித்து, அதைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுகின்றனர். நேற்று பெய்சிங்கில் துவங்கிய சீனத் திபெத் பண்பாட்டுக் கருத்தரங்கில் பேசிய சீனத் திபெத் பண்பாடு பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சங்கத்தின் பொறுப்பாளர் திபெத்தில் தனித்தன்மை மிக்க பண்பாடு மற்றும் இயற்கை காட்சிகள் மீது பல அன்னிய நண்பர்கள் பெரும் ஆர்வம் கொண்டுள்ளனர் என்றார். தற்போது, வெளிநாடுகளில் வாழும் சீனர்களின் 20க்கு அதிகமான பிரதிநிதிகள் இச்சங்கத்தில் இடம்பெறுகின்றனர். அவர்கள் பலமுறை திபெத்திற்கு வந்து பெரிய இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். தவிர, அவர்கள் அமெரிக்காவில் திபெத் பண்பாட்டு பொருட்காட்சியும் நடத்துகின்றனர். இந்த நடவடிக்கைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் பிரமுகர்களும், திபெத்தியல் அறிஞர்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர்.
|