
எமது செய்தியாளர்கள், துங் இன கிராமத்தில் நுழைந்த உடனே, இளைஞர்கள் பலர், Lu Sheng எனும் ஒருவகை இசைக்கருவியை ஊதி, மங்கையர்கள் கைகளில் பூக்கள் அச்சுடிக்கப்பட்ட கூடைகளை ஏந்திய வண்ணம், ஆடிக்கொண்டே வரவேற்று, கிராமத்தின் மையப் பகுதியிலுள்ள சதுக்கத்தில் எங்களை அழைத்துச் சென்றனர். துங் இனவாசிகள் "நூறு குடும்ப விருந்து" நடத்தும் இடம், இதுவாகும்.
Lu Sheng என்பது, மூல்கிலான ஒரு வகை இசைக்கருவியாகும். துங் இனத்தவர்கள் இதை மிகவும் விரும்புகின்றனர். Lu Sheng இசையின்றி, மகிழ்ச்சியூட்டும் சூழ்நிலை தோன்றாது. எனவே, "நூறு குடும்ப விருந்து" நடைபெறும் முன், இக்கருவியை இசைக்க வேண்டும். ஆண்கள் இதைக் கட்டி அனைத்து ஊதிக்கொண்டே ஆடுகின்றார்கள். மிகவும் உற்சாகம். அப்போது, முதியவர்களும் ஆடுவர். சாப்பிடுவதற்கு முன் கொஞ்சம் விளையாடுவது போல் இது காட்சியளிக்கின்றது.
சூரியன் மறையும் வரை, Lu Sheng இசை ஓய்ந்ததுடன் அனைவரும் நடனம் நிறுத்தினர். பின்னர், அனைவரும் சேர்ந்து சதுக்கத்தில் மேசைகளை வரிசையாக வைத்து, ஒன்றாக இணைத்தனர். இவ்வாறு ஒரு நீண்ட மேசைத்தொகுதியாக அவை மாறின. மூதாட்டிகளும், மூத்த பெண்களும் தாம் சமைத்த காய்கறிகளை அதில் வைத்து, ஒவ்வொருவருக்கும் முன் மதுபானம் வைத்த பின், நூறு குடும்ப விருந்து உருவாயிற்று.
விருந்து துவங்கும் முன், கிராமத்தில் மதிப்புக்குரிய முதியவர் ஒருவர் கலந்து கொள்வோரிடம் கிராம விதிகள் பற்றி விளக்கிக் கூறுவார். இந்த நிகழ்ச்சி மூலம் கிராமவாசிகள் ஒன்றுபட்டு, இவ்விதிகளை கடைப்பிடித்து, கிராமத்தை மென்மேலும் வளரச் செய்யுமாறு அறிவுறுத்துவது இதன் நோக்கமாகும்.
|