இலங்கை காத்தான்குடி-5 மு. மு. மபாஸ் எழுதிய கட்டுரை
cri
இவ்வருடத்தை சீன இந்திய நட்புறவு ஆண்டாக பிரகடனப்படுத்திய சீன அரசாங்கத்துடன் இந்தியாவின் நட்புறவுக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் கன்னியப்பனின் பேட்டி வித்திட்டுவிட்டது. சீன வானொலி நிலையம் கூட இரு நாட்டு நட்புறவுக்கு மிகச் சிறந்த பாலமாய் அமைந்துள்ளது. சீன இந்திய நாடுகள் பொருளாதாரம் கலாசாரம் சமூகம் ஆகிய துறைகளில் மிகவும் முன்னேற்றமடைந்து உயரிய நிலையை அடைய வேண்டும். இனிவரும் காலங்களில் இரு நாடுகளும் மிகுந்த உயர் நிலையை அடையும் என்ற நம்பிக்கையுள்ளது. இரு நாடுகளிலும் மிகுந்த வர்த்தக உறவுகள் இருக்கும். 2010ல் சீன இந்திய பொருளாதாரம் மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். பொருளாதாரத்திலும் எல்லா விதத்திலும் வல்லரசு நாடுகளாக இனிவரும் காலங்களில் இருக்கும் என்பதில் எந்த வித ஐயமில்லை. சீன இந்திய நட்புறவு இரு நாட்டு மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். சீன இந்திய நட்புறவு ஆண்டை வரவேற்க சீன மக்களும் இந்திய மக்களும் மிகவும் ஆவலாக இருப்பது சீன இந்திய நட்புறவுக்கு உற்சாகத்தை ஊட்டுகிறது. பொருளாதாரம் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் முதன்மையாக இருக்கிறது. சீன இந்திய நட்புறவால் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள முடிகின்றது. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இந்திய மக்களுக்கு சீனா மிகப் பெரிய உதவியை வழங்கியது. இது சீன இந்திய நட்புறவால் ஏற்பட்ட விளைவாகும். சீன மக்களின் எண்ணிக்கை 130 கோடியை எட்டிவிட்டது. இதில் கிராம மக்கள் 80 கோடி ஆகும். அதே போன்று இந்தியாவிலும் தற்போது மிகவும் ஜனத் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிகிறது. 2011ம் ஆண்டுக்குப் பின் இந்திய மக்கள் தொகை சீன ஜனத் தொகையை விட அதிகரிக்கும் என்று கணிப்பீடுகளில் இருந்து அறிய முடிகின்றது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தூதாண்மை உறவு நிறுவப்பட்டு 56 ஆண்டுகள் ஆகப் போகின்றது. எதிர்வரும் 2008ம் ஆண்டில் சீன இந்திய வர்த்தக மதிப்பு 2000 கோடி அமெரிக்க டாலரை எட்ட வேண்டும். எட்ட முடியும் என்ற எண்ணம் விருப்பம் நிறையவே இருக்கிறது. வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன. சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவு ஏப்ரல் திங்கள் இந்தியாவில் பயணம் செய்தார். இந்தியாவின் மென்பருள் துறை இந்திய அரசுக்கு 4500 கோடி அமெரிக்க டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பை வழங்கியுள்ளது. இது மிகவும் உயரிய அந்நியச் செலாவணி கையிருப்பாகும். அந்நியச் செலாவணி கையிருப்பில் ஜப்பானை முந்தி முதலிடத்தில் சீனா உள்ளது. இது சீனாவுக்கு பெருமை தேடித்தரும் விடயமாகும். இது சீனாவின் பொருளாதார வளர்ச்சியால் அடைந்த பயனாகும். இன்னும் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குப் பின் சீன இந்திய நட்புறவால் சீனாவும் இந்தியாவும் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி அடைந்து அபிவிருத்தியடைந்த நாடுகள் பட்டியலில் சேர்ந்து வரலாறு படைக்கும் என்பதில் ஐயமில்லை. சீன மக்களின் உணவில் காரமும் கிடையாது. உப்பும் கிடையாது. ஆனால் நன்றாக இருக்கும். இந்திய மக்கள் சீனாவுக்கு விருந்துக்கு வந்தால்சீன மக்கள் மிகவும் நல்ல முறையில் வரவேற்று சிறந்த முறையில் உணவு பரிமாறுவார்கள். இது சீன இந்திய நட்புறவால் ஏற்பட்ட சிறந்த நல்ல பழக்கமாகும். சீன மக்களும் இந்திய மக்களும் மிகவும் நன்றாக பழகுகிறார்கள். இரு நாட்டு மக்களும் மிகவும் தோழமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இது சீன இந்திய நட்புறவால் ஏற்பட்ட நல்ல பயனாகும். இந்த நல்ல தோழமை சிறந்த நட்பு, இரு நாட்டு பழக்க வழக்கம், மக்களிடம் பழகுவது ஆகியவற்றில் சீனாவும் இந்தியாவும் நட்புறவு ஆண்டில் நல்ல முறையில் நட்புடன் இருக்க என் இதயங்கவர்ந்த வாழ்த்துக்கள். சீனாவும் இந்தியாவும் தமிழ் புத்தாண்டை மிகவும் நல்ல முறையில் வரவேற்று கொண்டாடுகிறார்கள். எல்லா விதத்திலும் சீன மக்களும் இந்திய மக்களும் ஒற்றுமையை கடைப்பிடித்து வருகிறார்கள். இந்த ஒற்றுமை தொடர்ந்து நிலவி சமாதான முயற்சிகளில் இரு நாடுகளும் மிகவும் நல்ல முறையில் ஒத்துழைத்து சீன இந்திய நட்புறவு சிறப்படைய வாழ்த்துத் தெரிவிக்கின்றேன். தற்போது சீனா இலவச கட்டாயக் கல்வி முறையை அறிமுகப்படுத்தியது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இதை நான் மனதார பாராட்டுகின்றேன். அதே போன்று இந்தியாவும் வெகுசீக்கிரமாக இலவச கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும். இந்திய பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் சீன மொழியை கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் செலுத்துகிறார்கள். அதற்கேற்ப ஆசிரியர்கள் சீன மொழியை கற்று தேர்ச்சி பெற்று மாணவர்களுக்கு கற்பிக்கிறார்கள். அதே போன்று சீனப் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் மொழியை கற்றுக் கொள்வதில் பெரும் முயற்சியை மேற்கொள்கிறார்கள். இதுவும் சீன இந்திய நட்புறவுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். சீன இந்திய நட்புறவு ஆண்டாக இந்த ஆண்டை பிரகடனப்படுத்திய சீனாவும் இந்தியாவும் மிகவும் நல்ல முறையில் எல்லா துறைகளிலும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகும். இந்த இரு நாட்டு நட்புறவு வளர்ந்து மிகவும் உயர் நிலைய அடைய என் இனிய நல் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன்.
|
|