இவ்வாண்டின் முதல் 9 திங்களில், சீனாவின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு, ஒரு லட்சம் 27 ஆயிரம் 260 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 24 விழுக்காடு அதிகம். ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆசியான் சீனாவின் நான்கு பெரிய வர்த்தக கூட்டாளிகளாக உள்ளன என்று சீனச் சுங்கத் துறையின் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. இவ்வாண்டின் முதல் 9 திங்களில், சீன-ஐரோப்பிய வர்த்தகம், சீன-அமெரிக்க வர்த்தகம் முறையே 19 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை தாண்டியது. இது, கடந்த ஆண்டில் இருந்ததை விட 20 விழுக்காடு அதிகமாகும். சீன-ஜப்பானிய வர்த்தகம், பத்து விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது. இவ்வாண்டின் முதல் 9 திங்களில், சீன-ஆசியான் வர்த்தகம் 11630 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டில் இருந்ததை விட 20 விழுக்காட்டுக்கு அதிகம்.
|