அந்நிய முதலீட்டைப் பயன்படுத்தும் நெடுநோக்கு திட்டத்தில் மாற்றம்
cri
அடுத்த ஐந்தாண்டுகளில், அந்நிய முதலீட்டைப் பயன்படுத்தும் நெடுநோக்கு திட்டத்தில் சீனா முக்கிய மாற்றத்தை செய்யப்போகிறது.
சீனாவில், நிர்வாக ரீதியில் அன்னிய முதலீட்டை பெருக்குவதற்குப் பதிலாக, சந்தைப் பொருளாதார விதிக்கிணங்க முதலீடு ஈர்க்கப்படும். முன்பு, அந்நிய முதலீட்டை கொண்டு வருவதன் மூலம் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டது.
இனிமேல், தொழில் நுட்பம் மற்றும் நிர்வாகத் திறமைசாலிகளை ஈர்ப்பதன் மூலம் சுயேச்சையான தொழில் தரத்தை உயர்த்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று சீன வணிக அமைச்சகத்தின் பொறுப்பாளர் செய்தியாளரிடம் தெரிவித்தார். வேளாண்மை, உயர் தொழில் நுட்பத் தொழில், அடிப்படை வசதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சேவைத் தொழில் முதலியவற்றில் முதலீடு செய்யுமாறு சீனா அந்நிய வணிகர்களுக்கு ஊக்கமளிக்கும். அந்நிய முதலீட்டாளர்கள் சீனாவின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் முதலீடு செய்வதற்கு சீனா வழிகாட்டும். அந்நிய முதலீட்டாளர்கள், உள்நாட்டுத் தொழில் நிறுவனங்கள், குறிப்பாக, தனியார் தொழில் நிறுவனங்களுடன் கூட்டாக முதலீடு செய்யும் திட்டங்களுக்கு சீனா முன்னுரிமை வழங்கி ஊக்கம் தரும் என்று அவர் சொன்னார்.
இனிமேல், உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டு தொழில் நிறுவனங்களுக்கு ஒரே மாதிரியான கொள்கை வகுக்கப்படும். நியாயமான முறையில் அவை போட்டியிடக்கூடிய சந்தைப் பொருளாதாரச்சூழல் சீனாவில் படிப்படியாக உருவாக்கப்படும்.
|
|