சீனப் பொருளாதார வளர்ச்சி
cri
அமெரிக்க-சீன பொருளாதார உறவு மிகவும் முக்கியமானது. சீனப் பொருளாதார வளர்ச்சி, உலகிற்கு பயன் தரும் என்று அமெரிக்க நிதி அமைச்சர் Paulson கூறியுள்ளார். நேற்று அமெரிக்காவின் Fox தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், சீனாவுடனான பொருளாதார உறவு, அமெரிக்காவிற்கும் இதர நாடுகளுக்கும் மிகவும் முக்கியமானது என்றார். அமெரிக்காவைப் பொறுத்த வரை, மிக முக்கியமானது. சீனாவுடனான பொருளாதார உறவு நீடித்து நிலைக்கும் என்பதாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். சீனப் பொருளாதாரம், உலகப் பொருளாதாரத்தில் ஒரு பகுதியாக மாறி விட்டது என்றும், சீனப் பொருளாதார வளர்ச்சி, அமெரிக்காவிற்கும், இதர நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கும் பயனளிக்கும் என்றும் அவர் கூறினார். சீன அரசு மற்றும் மக்கள் பெற்றுள்ள சாதனையை பாராட்டிய அவர், சீனப் பொருளாதாரத்திற்கும், ஏற்பட்டுள்ள சில சவால்களையும் சுட்டிக்காட்டினார்.
|
|