• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-13 21:49:45    
விளையாட்டுச்செய்திகள்

cri
பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள்:

ஸ்பெயின் நாட்டு மேட்ரிட் நகரில் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 8ம் நாள் வரை நடைபெற்ற பெண்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகளில் நெதர்லாந்து அணி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. இறுதி பந்தயத்தில் ஆஸ்திரேலிய அணியை 3 - 1 என்ற கோல் கணக்கில் வென்ற நெதர்லாந்து அணி 2006ம் ஆண்டின் பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பையை வென்றது. இது நெதர்லாந்து அணி வெல்லும் 7வது உலகக் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்து பெண்கள் ஹாக்கி அணி 1972, 1974, 1978, 1983, 1986, 1990 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளையும் வென்று சாம்பியனாக திகழ்ந்தது. 1990ம் ஆண்டிற்கு பிறகாக கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் உலக சாம்பியனாக உலகக் கோப்பையை வென்றுள்ளது நெதர்லாந்து அணி. 1998லும், 2002ம் ஆண்டிலும் நடைபெற்ற உலகக் கோப்பைகளை இறுதியாட்டத்தில் கோட்டைவிட்ட நெதர்லாந்து இம்முறை திறமையுடனும் நேர்த்தியுடனும் விளையாடி ஆஸ்திரேலிய அணியை வென்று மீண்டும் உலக சாம்பியன் ஆகியுள்ளது. 12 அணிகள் இடம்பெற்ற இந்த போட்டியில் இறுதியாட்டத்தை வென்ற நெதர்லாந்து முதல் இடத்தையும், இறுதியாட்டத்தில் நெதர்லாந்திடம் உலகக் கோப்பையை தவறவிட்ட ஆஸ்திரேலியா 2ம் இடத்தையும், அர்ஜென்டினா 3ம் இடத்தையும், ஸ்பெயின் 4ம் இடத்தையும், ஜப்பான் 5ம் இடத்தையும், அமெரிக்கா 6ம் இடத்தையும், இங்கிலாந்து 7ம் இடத்தையும், ஜெர்மனி 8ம் இடத்தையும், கொரியா 9ம் இடத்தையும், சீனா 10ம் இடத்தையும், இந்தியா 11ம் இடத்தையும், தென்னாப்பிரிக்கா 12ம் இடத்தையும் பெற்றன.

15வது ஆசிய விளையாட்டு போட்டிகள்:

15வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இவ்வாண்டு டிசம்பர் முதல் நாள் தோஹாவில் தொடங்கவுள்ளது நாம் அறிவோம். இந்த ஆசிய விளையாட்டு போட்டி துவங்குவதற்கு முன்பாக ஆசிய விளையாட்டு தீபம் ஏற்றப்பட்டு அது ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் பவனியாக கொண்டுவரப்படுவது வழமை. ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளிலும் இதே வழமை கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி தோஹாவில் நடைபெறவுள்ள 15வது ஆசிய விளையாட்டு போட்டிகளின் தீபமும் கடந்த ஞாயிறு இரவு தோஹாவில் ஏற்றப்பட்டு அதன் ஆசிய பவனியின் துவக்கத்தை அடையாளபடுத்தியது. தோஹா கோல்ப் மைதானத்தில் நடைபெற்ற ஆசிய தீபமேற்றும் விழாவில் தோஹா ஆசிய விளையாட்டு போட்டிகளின் ஏற்பாட்டு குழுவின் தலைவர் ஷேக் தமீம் பின் ஹமத் அதானி தீபத்தை ஏற்றி வைத்தார். இந்த தீபம் வரும் இரண்டு மாதங்களில் 15 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பவனியாக கொண்டு செல்லப்படும். ஆசிய விளையாட்டு போட்டிகளின் மாண்பையும், முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில் இந்த ஆசிய தீபம் ஆசியாவின் பல பகுதிகளில் பவனியாக எடுத்துச் செல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 3500 பேர் இந்த இரண்டு மாத கால ஆசிய தீப பபனியில் இத்தீபத்தை ஏந்திச் செல்வார்கள் எனப்படுகிறது. இந்தியா, தென்கொரியா, பிலிப்பீன்ஸ், ஜப்பான், இந்தோனேஷியா, தாய்லாந்து, ஈரான், ஓமான், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், குவைத், பஹ்ரைன், சீனா பெருநிலப்பகுதி மற்றும் மக்காவ், ஹாங்காங் ஆகிய பகுதிகளை இந்த ஆசிய ஜோதி பவனி வரும். நவம்பர் மாத இறுதியில் கத்தார் நாடு திரும்பும் இந்த ஆசிய ஜோதி டிசம்பர் முதல் நாள் தோஹாவின் கலீஃபா விளையாட்டர்ங்கை 15வது ஆசிய விளையாட்டு போட்டிகளின் துவக்கத்தின்போது சென்றடையும்.

சீனாவை அக்டோபர் 21ம் நாள் வந்தடையவுள்ள இந்த ஆசிய தீபம், தியானென்மன் சதுக்கத்திலிருந்து சொர்க்க கோயில் வரை கொண்டு செல்லபட்டு பின் குவாங்சோ சென்றடையும். ஒலிம்பிக் நடைமுறைக்கு ஏற்ப இந்த ஆசிய தீப பவனி நடைபெற உள்நாட்டு ஏற்பாட்டாளர்கள் உரிய நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். 2010ம் ஆண்டில் நடைபெறவுள்ள 15வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் குவாங்சோவில்தான் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.