• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-13 15:51:36    
சீனாவின் தாவோல் இனத்தைச் சேர்ந்த பெண்மணி து மீன் யே

cri

வணக்கம் நேயர்களே, கடந்த சில திங்களில், பல நேயர்கள் கடிதங்கள் மூலம், எமது சீன மகளிர் நிகழ்ச்சியை பாராட்டினர். நான் மகிழ்ச்சியடைந்தேன். மிக்க நன்றி. சீன மகளிர் நிகழ்ச்சியில் வேறு நாட்டு பெண்களை அறிமுகப்படுத்தலாமா என்று சிலர் கோரினார்கள் மன்னிக்கவும். இது சீன மகளிர் நிகழ்ச்சி ஆகவே, சீன மகளிர் பற்றி மட்டுமே அறிமுகப்படுத்துவோம்.
சரி, இன்றைய சீன மகளிர் நிகழ்ச்சியில், சீனாவின் தாவோல் சிறுப்பான்மை இனத்தைச் சேர்ந்த பெண்மணி து மீன் யே அம்மையார் பற்றி கூறுகிறோம். அறிவிப்பாளர் விஜயலட்சுமி


இளமைத் துடிப்புடனும் தன்னம்பிக்கையுடனும் கூடிய து மீன் யே சீனாவின் வட கிழக்கிலுள்ள தாவா தாவோல் இனத்தின் தான்னாட்சி மாவட்டத்தில் பணியாற்றுகிறார். ஒரு சிறிய கிராம மலைபகுதியில் அவர் பிறந்தார். சிறிய வயதில், ஒரு பெரிய கருப்பு நாயுடன் விளையாடினார். மலை ஏறினார், ஆற்றில் இறங்கி மீன் பிடித்தார். சுதந்திரமான வாழ்க்கை நடத்தினார். அவர் கூறியதாவது
சிறு வயதில் இருந்த உலகத்தை, இப்போதும் நினைத்துப் பார்க்கும் போது அற்புத உலகமாக உள்ளது ஆனால், பின் தங்கிய நிலைமை மட்டும் மாறவே இல்லை. மலை கிராமப்புறத்தில் மின்சாரம் இல்லை. வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளும் ஒரே ஒரு கருவி, வானொலி பெட்டி தான். வானொலி பெட்டி மூலம், நான் வெளி உலகத்தை புரிந்து கொள்ள முடிகிறது, பல பயனுள்ள தகவல்களைப் பெறமுடிகிறது. இதன் விளைவாக, வறுமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற மன உறுதி எனக்கு ஏற்பட்டது.
பெண் குழந்தைக்கு கல்வி கற்பிப்பதில் தாவோல் இனம் மிகவும் அக்கறை செலுத்துகிறது. எனவே, சிறிய வயதில் அவர் பள்ளிக்குச் சென்று பயில முடிந்தது. பள்ளிக்கும், கிராமத்துக்குமிடையில் 15 கிலோமீட்டர் தொலைவு. வழியில் அவர் இரண்டு மலைகளில் ஏறி இரண்டு ஆறுகளையும் கடக்க வேண்டும். குதிரை, மாட்டு வண்டி, டிரக் ஆகியவை மூலம் அவர் பள்ளிக்குச் சென்றார். ஆனால் பெரும்பாலா நேரங்களில் நடந்தே தான் செல்ல வேண்டியிருந்தது. அவர் கூறியதாவது
பத்தாண்டுக்கும் மேற்பட்ட அதிகமான பள்ளி வாழ்க்கை காலத்தில், நான் ஒரு முறை தோல்வி அடைந்தால் கூட இன்றைய வாழ்க்கை இல்லை. தற்போது, எனக்கு ஒரே நோக்கம். அறிவு மூலம், வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்றார்.
து மீன் யே பல்கலைகழகத்தில் கல்வி முடிந்த பின், ஊருக்கு திரும்பி 8 ஆண்டுகள் ஆசிரியர் பணி புரிந்தார். பின்னர், அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று, மாவட்டத்தின் துணை தலைவரின் செயலராக மாறியுள்ளார். பணி காரணத்தால், மாவட்டத்திற்கு முதலீட்டை ஈர்க்கும் போக்கில், பல விருந்தினர்களை சந்தித்தார். தாவோல் இனத்தின் பல்வேறு துறை நிலைமைகளை விருந்தினர்களிடம் விளக்க வேண்டியிருந்தது. ஆனால், மாவட்டத்தின் சுற்றுலா துறை துவக்க கட்டத்தில் இருந்ததால், வழிகாட்டிகள் மிகக் குறைவு. து மீ யே பல நூல்களை படித்து, தாவோல் இனத்தின் வரலாறு, பழக்கவழக்கங்கள், பண்பாடு ஆகியவற்றை நான்றாக புரிந்து கொண்டு, விருந்தினர்களிடம் விளக்கி கூறினார். பலர் இதைப் பற்றி கூறிய போதிலும், நீங்கள் மட்டுமே, இந்த இனத்தை நான்றாக புரிந்து கொண்டு, ஈடுபாட்டுடன் விளக்குவதால் பாதிப்பு ஆற்றல் அதிகம் என்றார் அவர்.