• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-20 11:43:02    
து மீன் யே

cri
ஊரை விரும்பினால், உலகத்தை விரும்ப முடியும். நான், ஆக்கபூர்வமான தன்னம்பிக்கையுடன் கூடிய மனப்பாங்குடன் சேர்ந்து, பணியில் நன்றாக ஈடுபட முடியும் என்றார்.

அவருடைய ஆக்கபூர்வமான முயற்சி மூலம், 2005ம் ஆண்டு ஜனவரி திங்கள், சுற்றுலா அலுவலகத்தின் துணை தலைவராக அவர் நியாமிக்கப்பட்டார். ஒரு புதிய பணியை எதிர்நோக்கி, முதலில் கற்றுக் கொள்ள விரும்பி தாமாக நூல்களைப் படித்ததோடு, மற்றவரிடமும் கேட்டறிந்தார். அவர் படிப்படியாக துறை நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி, சுற்றுலாச் சந்தையைத் திறந்து வருகிறார். மாவட்டத்தின் குளிர்காலம் நீண்டு இருப்பதால், சுற்றுலா காலம் மிகவும் சுருக்கமானது. எனவே, அவர், தனிச்சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் திட்டங்கள் பயணிகளை ஈர்க்க தீர்மானித்துள்ளார். அவர் கூறியதாவது

தாவோல் தேசிய இனத்தின் பண்பாடு, தனிச்சிறப்புடையது. உண்மையான பண்பாட்டுடன் கூடிய சுற்றுலாப் பயணம், பண்பாட்டு சுற்றுலாவாகும். சுற்றுலாப் பயணிகள், தாவோல் இனத்தை அறிந்துக் கொள்ள விரும்ப துணை புரிந்தால், சுற்றுலாச் சந்தையை திறக்கலாம் என்றார்.

நேயர்களே, இப்போது நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, தாவோல் இனம், ஆண்டுதோறும் கொண்டாடும் வோபௌ விழாவின் ஒலிப்பதிவாகும்.. வோபௌ விழா என்பது, மாவட்டத்தில் வணிகரையும் முதலீட்டையும் ஈர்த்து, பண்பாட்டு சுற்றுலா வளர்ச்சியின் முக்கிய நடவடிக்கையாகும். தவிரவும், பண்பாட்டு சுற்றுலா வளர்ச்சிக்காக, தாவோல் இன பூங்கா, சர்வதேச சாமான் பண்பாட்டு பொருட்காட்சியகம் ஆகியவை நிறுவப்பட்டன. தேசிய பொருள் மற்ற தொல் பொருள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள தாவோல் இனத்துக்கு மட்டுமே உரித்தான ஹாக்கி பந்து விளையாட்டு தனியார் நாட்டுப்புற ஆடல்பாடல் குழுக்கள், வூ சூன் ஆகியவை மூலம், தவோல் இன பண்பாடு வளம் பெறுகிறது. தாவோல் இனத்தின் பண்பாடு, சீனா மற்றும் உலகத்தை ஈர்க்க துணை புரியும்.

து மீன் யே இறுதியாக கூறியதாவது

கடந்த பத்து ஆண்டுகளாக, எனகு பணி சாதனைகளைப் பார்த்தால், நான் பணியில் சோம்பல் அடையவில்லை. ஒவ்வொரு பணி அனுபவமும், என்னுடைய வாழ்க்கையின் அரிய சொத்து ஆகும். நான் ஒவ்வொரு முறையும் முழுமூச்சுடன் பாடுபடுகிறேன் என்றார் அவர்.

அறிவு மூலம், வாழ்க்கையை மாற்ற முடியும் என்பது இந்த கதையின் முக்கிய கருத்து ஆகும். நீங்கள் இதை ஏற்றுக் கொள்கிறீர்கள், வேறுபட்ட கருத்துகளும் யோசனைகளும் இருந்தால், மின்னஞ்சல் கடிதம், தொலைபேசி ஆகியவை மூலம், எங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

நேயர்கள் இது வரை, இன்றைய சீன மகளிர் நிகழ்ச்சி நிறைவறைகிறது. அடுத்த வாரத்தில் மீண்டும் சந்திப்போம்.