ச்சே ஜியாங், தென்கிழக்கு சீனாவிலுள்ள வளர்ந்த மாநிலமாகும். பண்டைக்காலத் தொட்டே, இம்மாநிலத்தின் வணிகர்களுக்கு, நாடெங்கும் சென்று வணிகம் செய்யும் வழக்கம் உண்டு. தற்போது ச்சே சியாங்கின் தொழில் நிறுவனங்கள், உலகளவில் வளர்ச்சி வாய்ப்பைக் கண்டறிய முயல்கின்றன.
அங்கோலாவின் தலைநகரான ருஆண்டா, அட்லாண்டிக் கடலை ஒட்டிய அழகான கடற்கரை நகராகும். எதிர்காலத்தில், சீனர்கள் கட்டித்தரும் வீடுகளில் வசிக்க முடியும் என்று அந்நகர மக்கள் எதிர்பார்க்க வில்லை. இந்த வீடுகளைக் கட்டும் ச்சே சியாங்கின் ஹுவா பொங் கட்டுமான நிறுவனம், ச்சே சியாங் மாநிலத்தின் நிங்போ நகரத்தைச் சேர்ந்த தனியார் தொழில் நிறுவனமாகும். கடந்த கோடைகாலத்தில், இந்நிறுவனம், ருஆண்டாவில் சுமார் 5.3 ஹெக்டர் நிலத்தில் வீடுகளையும் மாளிகையையும் கட்டுவதற்காக, அங்கோலாவின் வீடு மற்றும் நில உடைமைத்துறை தொழில் நிறுவனத்துடன் உடன்படிக்கையில் கையொப்பமிட்டது. இந்த நிறுவனத்தின் ஆளுனரின் துணையாளர் QIN LI JUN அம்மையார் எமது செய்தியாளரிடம் பேசுகையில், 12 கோடி அமெரிக்க டாலர் முதலீட்டுடன் கூடிய இந்தத் திட்டப்பணி, ஹுவா பொங் நிறுவனத்தின் வெளிநாட்டு வணிகத்தில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:
அங்கோலாவில் மட்டுமல்ல, தாய்லாந்திலும், நாங்கள் திட்டப்பணியைத் தொடங்கியுள்ளோம். தனியார் தொழில் நிறுவனங்களும் அரசுசார் தொழில் நிறுவனங்களும் உள்நாட்டு சந்தையை விரிவாக்குவதோடு, சர்வதேச சந்தையை திறந்து வளர்க்க வேண்டும் என்றார் அவர்.
தற்போது, ஆற்றல் மிக்க ச்சே சியாங் தொழில் நிறுவனங்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்து, ஆலைகளை நிறுவி, வர்த்தகத்தை மேற்கொண்டு, உடன்படிக்கை மூலம் திட்டப்பணிக்குப் பொறுப்பேற்க முயல்கின்றன. கடந்த ஆண்டில், ச்சே சியாங்கின் தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்த தொகை, 80 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. நெசவு, சட்டை, இயந்திர மின்னணு, வேதியியல் தொழில்துறை, தொலைத்தொடர்பு ஆகியவை இதில் அடங்கும்.
ச்சே சியாங் மாநிலத்தின் துணை தலைவர் ச்சூங் சான், வெளிநாடுகளில் வளர்ச்சியடைய முயற்சி செய்யும் தொழில் நிறுவனங்களைப் பாராட்டினார். அவர் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக, ச்சே சியாங்கின் தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்து, உடன்படிக்கை மூலம் திட்டப்பணிக்குப் பொறுப்பேற்று, ஒத்துழைப்பதை, ச்சே சியாங் மாநில அரசு ஊக்குவித்து, குறிப்பிட்ட முன்னேற்றம் கண்டுள்ளது. வெளிநாடுகளில் ச்சே சியாங் தொடங்கியுள்ள தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, வெளிநாட்டு பொருளாதார தொழில் நுட்பத்தின் தொழில் தொகை ஆகியவை, சீனாவில் முன்னணியில் நிற்கின்றன என்றார் அவர்.
வெளிநாடுகளில் புகழ் பெறுவது, ச்சே சியாங்கின் தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளில் வளர்வதற்கு முக்கிய காரணமாகும். யீ வான் என்னும் சர்வதேச வர்த்தக தொழில் நிறுவனம், இயந்திரப் பொருட்களை தயாரிக்கிறது. அதன் தலைவர் LAI CHANG DA பேசுகையில், தற்போது, தொழில் நிறுவனத்தின் அளவு பெரியதாக இல்லை. இருப்பினும், ஜெர்மனியில் ஒரு ஆலையை நிறுவ தயார் செய்வதாக கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
ஜெர்மனியில் ஆலையை நிறுவுவதன் மூலம், சர்வதேச அளவில் புகழை அதிகரித்து, ஐரோப்பாவில் எமது சின்னத்தை விரிவாக்க முடியும். எமது தொழில் நிறுவனம் நிங்போவில் மிகவும் புகழ்பெற்றது. ஆனால், அது, ஒரு சிறிய நகர் தான். வெளிநாடுகளில் வளர்ச்சி பெற விரும்புகின்றோம் என்றார் அவர்.
|