• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-16 21:30:34    
2008 பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகள்

cri

2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கான தன்னார்வ தொண்டர்கள் தேவை என்ற தகவலை பெய்சிங் ஒலிம்பிக் ஏற்பாட்டு குழுவினர் வெளியிட்டபோது நினைத்ததைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. செப்டம்பர் 28ம் நாள் மாலை 5 மணி வரையிலான ஒரு மாத காலத்தில் மட்டுமே 29வது சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கான தன்னார்வ தொண்டர்களாக பணியாற்ற விரும்பி வந்து சேர்ந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 10 ஆயிரத்து 915 என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 28ம் நாளன்று தொடக்கம் பெய்சிங் மாநகரைச் சேர்ந்தவர்களை இந்த தன்னார்வ தொண்டர் பணிக்கென பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டு கமிட்டியினர் விண்ணப்பங்களை வரவேற்க தொடங்கினர். எதிர்பார்த்தது 70 ஆயிரம் மட்டுமே ஆனால் வந்துள்ளதோ 2 லடசத்து 10 ஆயிரத்துக்கும் மேல் அதாவது இரண்டு மடங்கு அதிகம். இதில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவ மாணவியர், கிட்டத்தட்ட 75 விழுக்காட்டினர் கல்லூரிகளின் வாயிலாக விண்ணப்பித்திருந்தனராம். பெய்சிங்கில் உள்ளவர்களுக்கான விண்ணப்பங்கள் மட்டுமே இவை. வருகின்ற டிசம்பரில் பெய்சிங்கிற்கு வெளியில் உள்ள மற்ற பகுதிகளின் சீனர்களுக்கான தன்னார்வ பணிக்கான விண்ணப்பம் வரவேற்கபடும். அடுத்த ஆண்டு மார்ச் திங்களில் வெளிநாட்டவருக்கான தன்னார்வ பணி விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என அறியப்படுகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான சிறப்பு தன்னார்வ தொண்டர்கள் தவிர கூடுதலாக 1 லட்சம் தன்னார்வ தொண்டர்கள் 2008ம் ஆண்டு கோடைக்காலம் முதலாக சுற்றுலா, தொடர்பு மற்ரும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் பணிக்காக தேவை உள்ளது என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

மேசை பந்து வீரர் குங் லிங்கூய்

சீனாவின் டேபிள் டென்னிஸ் மேசைப்பந்து வீரர் குங் லிங்கூய் வியாழனன்று மெசப்பந்து விளையாட்டு போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேசை பந்து விளையாட்டின் ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை ஆகிய மூன்று கிராண்ட் ஸ்லாம் எனப்படும் மாபெரும் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் வெற்றி வீரராக திகழ்ந்த மூன்று பேரில் ஒருவர் குங் லிங்கூய். இந்த சாதனையை, பெருமையை கொண்டுள்ள மற்ற இருவர் சீனாவின் லியு குவோலியாங் மற்றும் ஸ்வீடன் நாட்டு ஜான் ஒவே வால்டர் ஆகியோர் ஆவர். விரைவில் 31 வயதாகவுள்ள குங் லிங்கூய் ஓய்வு பெறுவதாக அறிவிப்பதற்கு முன்பு வரை சீனாவின் உள்நாட்டு புகழ்பெற்ற ஒரு மேசைபந்து விளையாட்டு குழுவின் பயிற்சியாளாராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.