• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-19 20:40:45    
துணிச்சலுடன் முதலையுடன் போராடிய கிழவி

cri

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு கிழவிக்கு கடந்த பிப்ரவரி திங்கள் 27ஆம் நாள் தீரச் செயல் விருது வழங்கப்பட்டது. ஒரு மாபெரும் முதலை அவளுடைய ஒரு நண்பரை கூடாரத்திலிருந்து கடித்து வெளியே இழுத்த போது, அந்த முதலையுடன் அவள் மிகவும் துணிவாக போராடியதே இதற்கு காரணம்.

2004ஆம் ஆண்டு அக்டோபர் திங்களின் 11ஆம் நாள் அதிகாலை, 61 வயதான ஏலிசியா. சொலோகான் வட பகுதியிலுள்ள யோக்ஜியோ தீபகற்பத்தில் ஒரு கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது, தீடீரென்று தங்களது நண்பர் அண்ட்ரூ. கோலின் கூக்குரல் ஒலியை கேட்டு கண் விழித்தார். அப்போது, 4.2 மீட்டர் நீளமும், 300 கிலோகிராம் எடையும் உடைய ஒரு முதலை, கோலை வாயில் பற்றியிருப்பதைக் கண்டார். எவரும் இயல்பாகவே ஈடுபடக் கூடிய ஒரு செயலில், அதாவது முதலையின் முதுகில் குதித்து அதனுடன் போராடும் நடவடிக்கையில் உடனே ஈடுபட்டார்.

அந்த முதலை அவரைத் தாக்கத் துவங்கியது. அது அவரின் மூக்கை முட்டி உடைத்ததோடு, அவருடைய கையைக் கடித்துத் துண்டிக்கும் நிலையில் இருந்தது. நல்லவேளையாகி, சொலோகானின் மகன் துப்பாக்கியால் அந்த முதலையை சுட்டுக் கொன்றார் அப்போது, மிகவும் பயமாக இருந்தாலும், இது நான் செய்ய வேண்டிய செயல். ஒருவர் ஆபத்தான நிலையில் இருந்தால் நீங்கள் உதவியளித்தாக வேண்டும் என்று சொலோகான் கூறினார்.

அவருடைய கை இன்று வரை, சுதந்திரமாக செயல்பட முடியாது. எனது கை வெட்டி எடுக்கப்படும் நிலையில் இருந்தது, இப்பொழுது என் கையில் இரண்டு உலோகத் தகடுகளும் 12 திருகாணிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இருப்பினும், முன்பு நான் செய்ய முடிந்த வேலையை இனிமேலும் செய்வேன். மனவுறுதி இருந்தால் உலகில் சாதிக்க முடியாத செயல் இல்லை என்றும் அவர் கூறினார்.