• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-17 13:40:11    
நலமாக வாழ்வோம்

cri
கலை.....வணக்கம் நேயர்களே இப்போது நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி நேரம்.

ராஜா......கலை, தமிழ் நாட்டிலே ஒரு பழமொழி உண்டு. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பார்கள். அதாவது மோசமாக நோய் தொற்றிய நோயாளிகள் எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டுமே என்பதற்காக எதையாவது தின்று நோயைப் போக்க வேண்டும் என்று துடிப்பார்கள்.

கலை.......ஆமாம். ராஜா, யார்தான் நோயுடன் வாழ விரும்புவார்கள்?எப்படியாவது நோய் குணமானால் நல்லதுதானே.

ராஜா......மக்களின் இந்த மனநிலையைப் பயன்படுத்தி சில அரைகுறை மருத்துவர்கள் சில திடீர் மருத்துவம் பற்றி நாளேடுகளில் விளம்பரம் செய்து லாபம் சம்பாதிக்கிறார்கள். சமீபத்தில் பெய்சிங் நகரின் ஒரு பூங்காவில் காலை நடைக்காக நானும் நேபாளப்பிரிவு நண்பர் கமலும் போயிருந்தோம். ஒரு இடத்தில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். ஒரு பெரியவர் ஒரு சிறு நாற்காலியைப் போட்டுவைத்திருந்தார். அதிலே ஒருவர் உட்கார்ந்திருக்க அவருடைய உடம்பு மீது பட்டுப் படாமலும் பெரியவர் தடவிக் கொடுத்தார். உடனே அந்த ஆள் மயிர்கூச்செரிவது போல சிலிர்த்துக் கொண்டார். விசாரித்தபோது என்ன சொன்னார்கள் தெரியுமா?

கலை.......என்ன சொன்னார்கள்?

ராஜா......அந்தப் பெரியவரின் உடம்பில் ஏதோ மந்திர சக்தி இருக்கிறதாம். அவர் உள்ளங்கையால் நோய்உள்ள இடத்தை வருடிக் கொடுத்தால் உடனே குணமாகிறதாம். தொடர்ந்து ஒரு வாரத்துக்கு இது போன்ற சிகிச்சை எடுக்க வேண்டும் என்றார்கள்.

கலை......ராஜா. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அறிவியல் யுகத்திலே இதை நம்ப முடிகின்றதா?

ராஜா......நானும் உட்கார்ந்தேன். உடம்புக்கு என்ன? என்று கேட்டார். கமலின் உதவியுடன் சளித் தொல்லை என்றேன். உடனே தோள்பட்டை பிடறி முதுகு என்று ஒவ்வொருபாகமாக மசாஜ் செய்வது போல பிடித்து விட்டார். பிறகு திடீரென எனது நெஞ்சின் மீது பட்டும்படாமலும் தனது உள்ளங்கையால் வருடிக் கொடுத்தார். எனக்கு மின்சார ஷாக் அடித்தது போல் இருந்தது.

கலை......உங்களுக்கு குணமானதா?

ராஜா.........இல்லை. இது பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்றால் பொதுவாகவே மனிதரின் உடம்பில் கொஞ்சும் மின்சாரம் ஓடுகின்றது. இதை ஸதாதிக் இலெச்சுச்சி என்பார்கள். குளிர்காலத்தில் இங்கே ஒருவருக்கு ஒருவர் கைகொடுக்க பயப்படுவது இல்லையா?ஏனென்றால் கைகொடுப்பதற்காக ஒருவரைத் தொட்டால் அவருக்கு ஷாக் அடிக்கும். அதுபோல அந்தப் பெரியவரின் உடம்பில் இந்த ஸ்டேட்டிக் மின்சாரம் அதிகமாகவே இருக்கின்றது. அது லேசாக வருடும் போது வெளிப்படுகின்றது. இதை மக்கள் மந்திரசக்தி என நினைக்கிறார்கள்.

கலை.....சரி ராஜா 40 வயதாகிவிட்டாலே மக்களுக்கு தங்களுடைய உடல்நிலை பற்றி திடீர் அக்கறை வந்து விடுகின்றது. நோய் எதுவும் வரக் கூடாதே என்று கவனமாக இருக்கிறார்கள். பத்திய உணவு உண்கிறார்கள். காலையிலும் மாலையிலும் நடை பயில்கிறார்கள். உங்களைப் போல.

ராஜா.....சமீபத்தில் பிரிட்டனில் வெவ்வேறு மருத்துவப் பிரிவுகளைச் சேர்ந்த 10 நிபுணர்களிடம் நீண்டநாள் ஆரோக்கியமாக வாழ உடல் பயிற்சி புகைபிடிப்பது, பத்திய உணவு இவை தவிர வேறு என்ன செய்யலாம் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சொன்ன ஆலோசனைகளைப் பார்க்கலாம்.