கலை........வணக்கம் நேயர்களே இன்றைய சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் புதிய வகை நூடல் கேக் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.
ராஜா........கலை ஒரு மாதிரி நூடல் பற்றி சொன்னீர்களே. இது என்ன?
கலை.......இந்த நூடல் கேக் பற்றி நான் சின்குவா உணவு இணையத்தில் படித்தேன். மிகவும் ஆர்வத்தைத் தூண்டம் உணவு. ஆகவே நமது உணவு நிகழ்ச்சியின் மூலம் நண்பர்களிடம் அறிமுகபடுத்த விரும்புகின்றேன்.
ராஜா.......அப்படியானால் நீங்கள் முதலில் சுவைத்துப் பார்த்தீர்களா?
கலை........ஆமாம். சுவைத்துப் பார்த்தேன். சுவையானது. பார்பதற்கும் அழகானது. நம்பாவிட்டால் நீங்கள் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளில் இதை சமைத்து பாருங்கள்.
ராஜா......சரி சோதனை முறையில் இதை சமைத்துப் பார்க்கிறேன்.
..................இசை............
கலை........சரி நாம் இந்த நூடல்ஸ் கேக் தயாரிப்பு நண்பர்களிடம் விளக்குவோம்.
ராஜா.......சரி முக்கியமாக நூடல்ஸ் கேக் தயாரிப்புக்கு தேவையான பொருட்கள் என்னஎன்ன?
கலை......சொல்கின்றேன். ரெடிமேட் நூடல் ஒரு பொட்டம் முட்டை 2, மக்காச் சோளம் 30 கிராம், பீன்ஸ் காய் 30 கிராம், கேரட் ஒன்று, கீரை கொஞ்சம்.
ராஜா.......இந்த நூடல்ஸ் கேக் சமைக்கும் போது தக்காளி சாஸ் தேவையா?
கலை.......கண்டிப்பாக தேவை. இதில் முக்கிய சுவையே தக்காளிதான்.
ராஜா.......வேறு சுவைப் பொருள் எது?
கலை.......உப்பு, மிளகாய் தூள் போன்ற சுவைப் பொருட்கள் தேவை. ருசிக்கு ஏற்ப எடுக்கலாம்.
ராஜா.......சரி எனக்கு புரிந்தது. இதில் முட்டை, மக்காச் சோளம், பீன்ஸ் காய் கீரை கேராட் ஆகியவை தேவை. இவற்றை தயாரிப்பதில் இன்னல் கிடையாது. அப்படிதானே.
கலை........ஆமாம். அடுத்து நாம் இந்த நூடல்ஸ் கேக் சமைப்பது பற்றி சொல்வோம்.
|