• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-18 17:58:51    
எமது நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துக்கள்

cri
க்ளீட்டஸ்: சேந்தமங்கலம் ஆர். பிரதீப் சர்மா எழுதியது. ஜூன் 27ம் நாள் சீன பண்பாடு நிகழ்ச்சியில் ராஜாராம் அவர்கள் இந்திய மற்றும் சீன திருமணங்களை பற்றி கூறினார். இந்தியாவில் திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்ப்பது போல் சீனாவிலும் பிறந்த ஆண்டின் விலங்குகளை வைத்து பொருத்தம் பார்க்கிறார்கள் என்று அறிந்துகொண்டோம். இந்த பொருத்தம் பார்ப்பது சீனாவில் குறைந்து வருவதைபோல இந்தியாவிலும் குறைந்தே வருகிறது. குறிப்பாக காதல் திருமணங்களில் ஜாதகமும் பொருத்தமும் பார்ப்பதில்லை. சீனாவில் இந்தியாவை போலவே பழமொழிகள் இருப்பதையும் அறிந்தோம். தமிழகத்தில் மாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம் ஆனால் குதிரைக்கு அவ்வளவு முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால் சீன மக்கள் குதிரைக்கும் மாட்டை போலவே முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பதை அறிந்தததோடு, குதிரையை மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும் என்ற கருத்தையும் நிகழ்ச்சியின் வாயிலாக அறிந்தோம் என்று எழுதியுள்ளார்.
வாணி: அடுத்து ஜூலை 21ம் நாள் ஒலிபரப்பான உங்கள் குரல் நிகழ்ச்சி குறித்து சேந்தமங்கலம் எஸ். பாலாஜி எழுதிய கடிதம். ராசிபுரம் நேயர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியை நாமக்கல் மாவட்ட நேயர்கள் வழங்கிய ஒலிப்பதிவின் வழியே கேட்டோம். பல நேயர்களை சீன வானொலிக்கி உருவாக்கித் தந்த அமரர் ஒய். எஸ். பாலு அவர்களின் துணைவியார் பேசியதைக் கேட்டோம். தனது கணவருடைய சிறப்பான அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டார். சிறப்பாக அமைந்த அவரது உரை எனக்கு மட்டுமல்ல என் போன்ற பல புதிய நேயர்களுக்கு வழிகாட்டியாக அமைந்திருக்கும். அவரை நேரில் சந்தித்து உரையாட வேண்டும் என்ற ஆவல் நிகழ்ச்சியை கேட்டபோது ஏற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
க்ளீட்டஸ்: தொடர்ந்து திருச்சி மணமேடு எம். தேவராஜா ஜூலை 25ம் நாள் ஒலிபரப்பான சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். பெருஞ்சுவரின் பிறப்பிடத்தில் கொண்டாட்ட விழா என்ற தலைப்பில் 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுகளை காணவரும் பயணியருக்கு சீன அரசு மேற்கொண்டுவரும் உதவி நடவடிக்கைகள் பற்றி கேட்டோம். பயணிகள் வசதியான பயன்கள் பெறவும், சீன வணிகர்கள் மிக உயர்வான லாபம் ஈட்டும் வகையிலும் ஒலிம்பிக் விழாவை அமைக்க சீன அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. பயணிகளும் சீன மக்களும் பயன்பெறும் இந்நடவடிக்கைகள் ஒலிம்பிக்கிற்கு பின்னரும் தொடரும் என நம்புகிறேன் என்று எழுதியுள்ளார்.