• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-20 20:44:27    
உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன் பட்ட போட்டிகள்

cri

ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக், அதாவது கலைத்திறனுடன் கூடிய ஜிம்னாஸ்டிக்கிலான உலக சாம்பியன் போட்டிகள் கடந்த 17ம் நாள் தொடக்கம் 21ம் நாள் வரை நடைபெற்றன. டென்மார்க் நாட்டின் ஆர்ஹுஸ் நகரில் நடந்த இந்த ஜிம்னாஸ்டிக் கலைத்திறன் போட்டிகளில் 70 நாடுகளைச் சேர்ந்த 1400க்கும் மேற்பட்ட உடலை வில்லாய் வளைத்து நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். இதில் ஆடவர் குழுப் பிரிவிலும், பெண்கள் குழுப்பிரிவிலும் சீனா முதலிடன் பெற்று தங்கம் வென்றுள்ளது. ஆடவர் குழுப்பிரிவில் 277.775 புள்ளிகளுடன் சீனா முதலிடம் பெற, 275.400 என்ற புள்ளிகளுடன் ரஷ்யா இரண்டாம் இடம்பெற்றது. ஜப்பான் 274.800 புள்ளிகள் பெற்று 3வது இடத்திலும், 272.225 புள்ளிகள் பெற்ற ரொமேனியா 4ம் இடத்திலும், 272.050 புள்ளிகள் பெற்று பெலாரஸ் 5வது இடத்திலும், 270.350, 270.025, 268.025 என்ர புள்ளிகள் பெற்று கனடா, ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகள் முறையே 6வது, 7வது மற்றும் 8வது இடங்களை பெற்றன.

பெண்கள் குழுப் பிரிவில் சீன 182.200 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற, 181.350 புள்ளிகள் பெற்ற அமெரிக்கா இரண்டாம் இடத்தையும், 177.325 புள்ளிகளுடன் ரஷ்யா 3வது இடத்தையும், 175.450 புள்ளிகள் பெற்று ரொமேனியா 4வது இடத்திலும், 174.250 புள்ளிகள் பெற்று உக்ரைன் 5வது இடத்திலும், 173.225, 172.975, 170.475 ஆகிய புள்ளிகளை பெற்று 6வது,7வது மற்றும் 8வது இடங்களை முறையே ஆஸ்திரேலியே பிரேசில் மற்றும் ஸ்பெயின் அணிகள் பெற்றன.

ஆடவர் பிரிவின் தனிநபர் திறமையின் ஒட்டுமொத்த சாம்பியனாக சீனாவின் யாங் வெய் வெற்றி பெற்றார். ஜப்பான் நாட்டு டோமிடா ஹிரோயுகி இரண்டாம் இடமும், ஜெர்மனியின் ஃபேபியன் ஹம்புச்சேன் மூன்றாம் இடமும் பெற்றனர்.

பெண்கள் பிரிவின் தனிநபர் திறமையின் ஒட்டுமொத்த சாம்பியனாக இத்தாலியின் வனெஸ்ஸா ஃபெராரியும், இரண்டாம் இடத்தை அமெரிக்காவின் ஜானா பியெகரும், மூன்றாம் இடத்தை ரொமேனியாவின் சான்ட்ரா ராலூக்கா இஸ்பாசாவும் பெற்றனர்.

ஜப்பான் ஓபன் பூப்பந்து போட்டி:

கடந்த ஞாயிறன்று நிறைவுபெற்ற 2006ம் ஆண்டின் ஜப்பான் ஓபன் பூப்பந்து விளையாட்டு போட்டியில் சீனா மூன்று தங்கங்களை வென்றது. ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர் மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவுகளில் சீன அணியினர் இந்த வெற்றிகளை பெற்றனர். பூப்பந்து விளையாட்டின் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சீனாவின் லின் டான் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதியாட்டத்தில் இந்தோனேசியாவின் தௌஃபீக் ஹிதாயத்தை வென்றார். முதல் செட்டை வென்ற ஹிதாயத்தை அடுத்த இரண்டு செட்களில் அபாரமாக விளையாடி தங்க பதக்கத்தை வென்றார் லின் டான். 16 - 21, 21 - 16, 21 - 3 என்ற செட்களில் லின் டான் வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் சீனாவின் ஒலிம்பிக் தங்க மங்கை ஷாங்க் நிங் மற்றொரு சீன வீராங்கனையான ஷியே ஷிங்ஃபாங்கை 21 - 11, 16 - 21, 30 - 29 என்ற செட் கணக்கில் ஏற்றமும் இறக்கமுமாக அமைந்த ஆட்டத்தில் இறுதியில் வெற்றி பெற்றார். பெண்கள் இரட்டையர் பிரிவில் சீனாவின் உலக சாம்பியன் காவ் லிங் மற்றும் ஹுவாங் சுயி இணை மற்றொரு சீன இணையான ஷாங் யாவென், வெய் யிலி ஆகியோரை 21 - 15, 21 - 17 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றனர். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தோனேசியாவின் டோனி குணவான் சான்ட்ரா வியயா இணையும், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தோனேசியாவின் ஃப்ளான்டி லிம்பேல், வீடா மரீசா இணையும் வெற்றி பெற்றன.