• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-24 21:38:36    
ஆயிரத்தில் ஒருவன்

cri
சீன தேசத்தில் சூயி வமிச ஆட்சியின் கடைசிக் காலத்தில் நாடெங்கும் விவசாயிகளின் கிளர்ச்சி பரவியது. அப்போது, தையுவான் சிறைச்சாலையின் தலைமைத் தளபதியாக இருந்த லியுவான் ராணுவப் புரட்சி நடத்தி, ஆட்சியைக் கைப்பற்றி, கி.பி. 618இல் தன்னை 'தாங்' வமிசப் பேரரசராகப் பிரகடனப்படுத்திக் கொண்டான். அவனுடைய மூத்தமகன் லி ஜியான் செங் பட்டத்து இளவரசன். ஆனான். இரண்டாவது மகன் லி ஷிமின் என்பவனை ச்சின் மாகணத்திற்கு இளவரசனாகவும், லி யுவான்ஜியே என்ற பெயர் கொண்ட மூன்றாவது மகனை ச்சி மாகாண இளவரசனாகவும் ஆக்கினான்.

இந்த மூன்று சகோதரக்களில் ச்சின் மாகாண இளவரசனான லி ஷிமின் கெட்டிக்காரனாக இருந்தான். தையுவான் கலகத்திற்குப் பிறகு நாட்டை ஒருங்கிணைப்பதில் பெரும் பங்காற்றினான். ஆனால் இந்த மூன்று சகோதரர்களுக்கு இடையே அதிகாரப் போட்டி உருவெடுத்தது. லி ஷிமின் அசைக்க முடியாத ஒரு சக்தியாக மாறி வருவதைக் கண்ட பட்டத்து இளவரசன், எங்கே தனது பதவிக்கு தனது தம்பி வேட்டு வைத்து விடுவானோ என்று பயந்து, கடைக் குட்டித் தம்பியான ச்சி மாகாண இளவரசனுடன் சேர்ந்து கொண்டு சதித்திட்டம் தீட்டினான். தந்தையோ உருப்படியில்லாமல் போனான். எடுப்பார் கைப்பிள்ளையாகச் செயல்பட்டான். இதைக் கண்டு கொண்ட லி ஷிமின், கி. பி. 626ஆம் ஆண்டில் கலகம் செய்து ஆட்சியைக் கவிழ்த்து, தனது இருசகோதரர்களையும் கொன்று, தகப்பனை சிம்மாசனத்தில் இருந்து இறக்கி விட்டு, தனக்குத் தானே தாங் வமிசப் பேரரசனாக முடி சூட்டிக் கொண்டான். அவன் பேரரசன் தை சோங் என அழைக்கப்பட்டான். வரலாற்றில் 'ஆயிரத்தில் ஒருவன்' என்ற பெயர் பெற்றான். சகோதரர்களைக் கொன்று, ஆட்சியைக் கைப்பற்றியதாலா இந்தப் பெயர்? அல்ல, அல்ல. ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அவன் அரசாட்சி செய்த முறையைக் கண்ட மக்கள் அவனை 'ஆயிரத்தில் ஒருவன்' எனப் போற்றினர்.

"மக்கள் தண்ணீரைப் போல. தண்ணீரில் படகு மிதக்கும். அதே வேளையில் படகை மூழ்கடிக்கும் ஆற்றலும் தண்ணீருக்கு உண்டு" என்று சீன தேசத்தின் மகத்தான தத்துவ ஞானி சுவாங்ஸி கூறினார். இதை மனதில் கொண்ட பேரரசன் தை ஜோங், தன்னுடைய ஆட்சி நிலைக்க வேண்டுமானால், மக்களை சமாதானப்படுத்த வேண்டும் என்று முடிவு கட்டினான். மக்களுக்குப் பாதுகாப்பையும், மனநிறைவையும் தரும் வகையில், பல ஆட்சி முறைச் சீர்திருத்தங்களைச் செய்தான். அவன் செய்த சீர்திருத்தங்களில் முக்கியமானவை இரண்டு. ஒன்று, யோசனை கேட்டுச் செயல்படுவது, இன்னொன்று, ஒரு வேலையைச் சரியான ஆளிடம் ஒப்படைப்பது.