• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-23 15:44:40    
மின்னணு பொருட்கள் பொருட்காட்சி

cri

நடந்து முடிந்த பொருட்காட்சியில், பன்னாட்டு வணிகர்களின் கொள்முதல், நுகர்வு மின்னணுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களைக் கவர்ந்தது. பென்கொ என்னும் தொழில் நிறுவனத்தின் பணியாளர் சாங் சீ தா பேசுகையில், இப்பொருட்காட்சியில் கலந்து கொள்ளும் வணிகர்களைப் பொறுத்தவரை, கொள்முதல் வணிகர்கள், மேலும் அதிகமான ஒத்துழைப்பு வாய்ப்புகளைக் கொண்டு வருகின்றனர் என்று கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:

இவ்வாண்டு பொருட்காட்சியின் அளவு முன்பை விட பெரியதாக இருக்கிறது. உண்மையில் புகழ்பெற்ற தொழில் சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்படுவது, மிகவும் முக்கியமானது.

தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும், இணையத்தின் மலர்ச்சியினால், தகவல் எங்கெங்கும் மரவும் என்பது, இந்தப் பொருட்காட்சியின் தலைப்பாகும். இத்தலைப்பு, தற்போதைய நுகர்வு வகையான வீட்டு பயன்பாட்டு மின்சாரக் கருவிகளின் வளர்ச்சிப் போக்கைப் பிரதிபலிக்கிறது என்று, சீன தகவல் தொழில் துறையின் துணை அமைச்சர் லோ ச்சின் சியான் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:

நுகர்வு மின்னணு பொருட்கள், multimedia உற்பத்தி பொருட்களுடன் நெருக்கமாக இணைந்தவை. டிஜிட்டல் நுகர்வு மின்னணு மற்றும் multimedia பயன்பாடு, எதிர்காலத்தில் தகவல் வீட்டு பயன்பாட்டு மின்சாரக் கருவிகளின் வளர்ச்சி போக்காக மாறியுள்ளது என்றார் அவர்.

உண்மையில், தொலைக்காட்சி பெட்டியில் இணைய தளத்தைப் பார்ப்பது, குளிர் சாதனப் பெட்டி தகவல்களை அனுப்புவது உள்ளிட்ட புதிய தொழில் நுட்பம் எங்களின் வாழ்வில் ஏற்பட்ட போது, மின்சார கருவிகள் ஒன்றிணையும் காலம் வரும். இந்த வகை மின்சார கருவிகளின் பல்வகைப் பயன் பற்றி உற்பத்தி வணிகர்களும், நுகர்வோர்களும் ஒரேகருத்துக் கொண்டுள்ளனர். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தப் பொருட்காட்சி, விநியோகத்துக்கும் தேவைக்குமிடையிலான பரிமாற்றத்தை வலுப்படுத்தி, நுகர்வு வகை மின்னணு உற்பத்தி பொருட்களின் வளர்ச்சியைத் தூண்டும். இப்பொருட்காட்சிக்குப் பொறுப்பு ஏற்ற ச்சிங் தேளவு நகரின் துணை தலைவர் யூ சொங் பேசுகையில், அடுத்த ஆண்டு, கொள்முதல் வணிகருக்கான அழைப்பு அளவை பெருக்கி, மேம்பாட்டைக் கொண்ட சில வகை உற்பத்தி பொருட்களை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

நுகர்வு மின்னணு பொருட்காட்சியில், ச்சிங் தேளவு நகரத்தின் தனிச்சிறப்புகள் இடம்பெற வேண்டும். முதலில், செல்லிட பேசி. இரண்டாவது, மின்சார இசை கருவி,டி.வி.டி உள்ளிட்ட பொழுத்துபோக்கு மின்னணு உற்பத்தி பொருட்கள். மூன்றாவது, மருத்துவ சிகிச்சை வகை மின்சார உற்பத்தி பொருட்கள். ச்சிங் தேளவு பொருட்காட்சியில் தனிச்சிறப்புடைய உற்பத்தி பொருட்களை படிப்படியாக வளர்க்க வேண்டும் என்றார் அவர்.