• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-23 15:41:02    
எவெரெஸ்ட் சிகரம் வழியாக ஒலிம்பிக் தீபம்

cri

2008ம் ஆண்டின் பெய்சிங் ஒலிம்பிக்கிற்கான தீபம் பல்வேறு நாடுகளில் பயணித்து வழியே பெய்சிங் மாநகரம் வந்தடையும் வழியில் உலகின் மிக உயரமான மலையான இமைய மலையின் உயரமான சிகரமான எவெரெஸ்ட் சிகரத்தையும் கண்டு வரும் என்று அறியப்படுதிறது. எவெரெஸ்ட் சிகரத்துக்கு ஒலிம்பிக் தீபத்தை கொண்டு செல்லும் திட்டத்தை ஆய்வு செய்துகொண்டிருப்பதாக 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டு கமிட்டியினரின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். திபெத்தில், நேபாள எல்லையில் அமைந்துள்ள இந்த எவரெஸ்ட் சிகரத்தின் வழியே பெய்சிங் மாநகரை வந்தடையும் வகையில் தற்போது இதற்கான ஆய்வுகளும் செயல் திட்டங்களும் தீட்டப்பட்டுவருகின்றன. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதற்காக மொத்தம் 37 விளையாட்டு கட்டுமானங்கள் 2007ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக கட்டி முடிக்கப்படும் என்றும் கட்டியமைக்கப்பட்டபின் 40 நிகழ்ச்சிகள் அல்லது விளையாட்டு போட்டிகள் இந்த விளையாட்டு திடல் மற்றும் அரங்கங்களில் சோதனை முறையில் நடத்தப்படும் என்றும் பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டு கமிட்டியினரின் செய்தித் தொடர்பாளர் யாங் பின்யுவான் என்பவர் கூறியுள்ளார்.

உலகின் உயரமான கட்டிடமான தைபெய் 101ல் மாரத்தான் போட்டி:

மாரத்தான் என்னும் நீண்ட தூர ஓட்டம் பற்றி நாம் அறிந்திருப்போம். பொதுவாக சாலைகளில் பல இடங்களைக் கடந்து விளையாட்டரங்கில் நிறைவு பெறுவதாக இந்த மாரத்தான் போட்டிகள் நடைபெறுகின்றன. ஆனால் சாலைகள், விளையாட்டு அரங்குகள் இல்லாமல் உலகின் உயரமான கட்டிடங்களின் படிகளின் வழியே மேல் தளத்திற்கு, கட்டிடத்தின் உச்சிக்கு ஏறும் ஒரு மாரத்தான் போட்டியும் நடைபெறுவது நம்மில் பலருக்கு தெரிந்திருக்காது. அத்தகைய ஒரு படிகளில் ஏறி உச்சியை அடையும் ஒரு போட்டி இன்று தைபெயில் நடைபெறுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கிடைத்த செய்திகள் கூறுகின்றன. உலகின் மிக உயரமான கட்டிடமான தைபெய் 101ல் இந்த மாரத்தான் போட்டி நடைபெறும் என்று அந்த செய்திகள் குறிப்பிட்டுள்ளன. கடந்த ஆண்டு முதன் முறையாக இந்த தைபெய் 101 கட்டிடத்தில் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. அவ்வாறே உலகின் மற்ற உயரமான கட்டிடங்களிலும் இத்தைகைய படியேறும் மாரத்தான் போட்டிகள் நடைபெறுகின்றன. தைபெய் 101ல் நடைபெறும் இவ்வாண்டு மாரத்தான் போட்டிக்கென வெளிநாடுகளின் முன்னணி படியேறும் போட்டிகளின் வீரர்கள் உட்பட ஆயிரம் பேர் பங்கெடுப்பார்கள் என்று இக்கட்டிடத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

91 மாடிகளையும், 2046 படிகளையும் இந்த போட்டியாளர்கள் ஏறவேண்டும். போட்டியின் பரிசுத் தொகை 6000 அமெரிக்க டாலர்கள். கடந்த ஆண்டும் ஜனவரி முதல் தேதியன்று திறந்து வைக்கப்பட்ட இந்த தைபெய் 101 கட்டிடம், மலேசியாவின் பெட்ரோனாஸ் இரட்டை கட்டிடத்தை விட உயரமானதாகும்.