இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், சீனாவின் தொழிற்துறை நிறுவனங்களின் கூட்டு மதிப்பு, 6 லட்சத்து 22 ஆயிரத்து 210 கோடி யுவான்னாகும். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, இது, 17.2 விழுக்காடு அதிகமாகும். சீன தேசிய புள்ளி விபர பணியகம் இன்று வெளியிட்ட தரவு இதனைக் காட்டுகின்றது. இதற்கிடையில், ரசாயன மூலப்பொருள், ரசாயன ஆக்கப்பொருள் தயாரிப்புத்தொழில், போக்குவரத்து சாதன தயாரிப்புத்தொழில், தொலைத் தொடர்பு சாதனம் மற்றும் கணிணி தயாரிப்புத்தொழில் உள்ளிட்ட முக்கிய தொழில்கள் விரைவாக வளர்ந்து வருகின்றன.
|