• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-25 16:06:09    
நாளை 1

cri

"ஒரு சத்தம் கூட இல்லையே... குழந்தைக்கு என்ன ஆச்சு?"

ஒயின் கிண்ணத்தை ஒருகையில் ஏந்தியடியே அடுத்த வீட்டை எக்கிப் பார்த்தான் சிவந்த மூக்குடைய குங். நீலத் தோலுடைய அவு தனது கிண்ணத்தைக் கீழே வைத்துவிட்டு, பக்கத்தில் இருந்தவனுடைய முதுகில் ஒங்கிக் குத்தினான்.

"பா..." பெரிதாக ஏப்பம் விட்டபடியே

"பழையபடி பைத்தியம் தொத்திக் கிடுச்சா?" என்றான்.

லுச்சன் ஒதுக்குப்புறமான ஒரு பழங்காலத்து ஊர். காவல்காரனின் முதல் விசில் ஒலிப்பதற்கு முன்பே ஊர் அடங்கி விடும். மக்கள் அனைவரும் வீட்டுக் கதவைச் சாத்திவிட்டு படுத்துவிடுவார்கள். நள்ளிரவில் இரண்டு வீடுகள் மட்டுமே விழித்தபடி இருக்கும். குபேர ஒயின்கடை அங்கு சில குடிகாரர்கள் இரவு முழுவதும் உற்காகமாக குடித்த படியே கிடப்பார்கள். அதற்கு அடுத்த வீட்டில் நாலாவது வீட்டு ஷானின் மனைவி வசித்தாள். இரண்டாண்டுகளுக்கு முன்பு விதவையாகிவிட்ட அவளுக்கு எதுவுமே இல்லை. ஒரேஒரு பருத்தி நூல் தறியில் நூல் நூற்று பிழைத்தாள். கூடவே மூன்று வயது மகன். அதனால் தான் அவளும் ரொம்பநேரம் கழித்தே தூங்கினாள்.

உண்மைதான். பல நாட்களாக நூல் நூற்கும் சத்தமே கேட்கவில்லை. நள்ளிரவில் இரண்டு வீடுகள் மட்டுமே விழித்திருக்கின்றன. குங் கிழவனுக்கும் அவனுடைய ஆட்களுக்கும் மட்டும்தான் நாலாவது வீட்டு ஷான் மனைவி வீட்டில் ஏதாவது சத்தம் வருகிறதா, இல்லையா என்பது தெரியும்.

முதுகில் குத்துவாங்கியதும் குங் கிழவன் சற்றுத் தெளிந்து விட்டான். ஒரு பெரிய மடக்காக ஒயின் குடித்துவிட்டு, ஒரு நாட்டுப்புற மெட்டை விசிலடிக்கத் தொடங்கினான்.

நாலாவது வீட்டு ஷானின் மனைவி கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்திருந்தாள். அவளுடைய செல்லமான பாவோ அவள் கரங்களில் முடங்கிக் கிடந்தான். திறி ஓசையின்றி தரையில் கிடந்தது. மங்கலான விளக்கொளி பாவோ முகத்தில் விழுந்த போது, அது காய்ச்சலால் சிவந்து வெளிறிப் போயிருந்தது.

"கோயிலுல சீட்டுக் குலுக்கி பார்த்தேன். சாமிகிட்ட நேர்ந்து கிட்டேன். சாமி குணப்படுத்துவாரு. அப்படியும் என் மகனுக்கு சரியாகலைன்னா என்ன செய்றது? டாக்டர் ஹோ ஷியோ சியேனிடம் எடுத்துக் கொண்டு போக வேண்டியதுதான். பாவோவுக்கு ராத்திரி மட்டும்தான் இந்த மாதிரி. நாளைக்குப் பெழுது விடிஞ்சதும் காய்ச்சல் விட்டுறலாம். அவனால தாராளமா மூச்சுவிட முடியும். பல நோய்கள் இந்த மாதிரிதான் தனக்குள்ளாக நினைத்துக் கொண்டாள் ஷானின் மனைவி."

அவள் ஒரு சாதாரணப் பெண். அச்சமூட்டும் "ஆனால்" என்ற சொல்லை அவள் அறிந்திருக்கவில்லை. அதனாலேயே பல கெட்ட விஷயங்கள் எல்லாம் நல்லதாக மாறின. பல நல்லதுகள் கெட்டதாக மாறின. கோடை இரவு மிகவும் குறுகியது. குங் கிழவனும் மற்றவர்களும் பாடுவதை நிறுத்திய போது, கிழக்கு வெளுக்கத் தொடங்கியது. விடியலின் வெள்ளி ஒளி ஜன்னல் இடுக்குகள் வழியாக வீட்டுக்குள் கசிந்தன.