• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-24 20:59:33    
உடல் பயிற்சியில் கவனம்

cri
கலை......பொதுவாக மனிதர்களுக்கு 40 வயதுக்கு மேல் இதய நோய் அபாயம் அதிகம் ஏற்படும். இது பற்றி என்ன ஆலோசனை?

ராஜா........பிரிட்டிஷ் இதயநோய்க் கழக மருத்துவமனையில் செவிலியாக இருக்கும் எல்லென் மேசன் என்ன சொன்னார் தெரியுமா?

40 வயதாகி விட்டால் உங்களுடைய டாக்டரிடம் போய் இதய நோய் அறிகுறி தெரிகிறா என்று உடல் பரிசோதனை செய்ய வேண்டும். இதில் ரத்த அழுத்தம் கொலஸ்ட்ரால் எனப்படும் ரத்தக் கொழுப்புச்சத்து பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். மேலும் உங்களுடைய வாழ்க்கை முறையில் இதய நோய் ஆபத்தை உண்டாக்கக் கூடிய பழக்கவழக்கங்கள் ஏதேனும் உள்ளதா என்று பார்க்க வேண்டும். தேவை ஏற்படுமானால் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

கலை..........முதுமை நெருங்கும் போது மக்களுக்கு பொதுவாக ஞாபக மறதி ஏற்படுகின்றது. இதைத்தடுக்க என்ன வழி?

ராஜா.......நினைவு இழப்பு நோய் இதை ஆங்கிலத்தில் அல்ஜெமிர் என்பார்கள். இது பற்றி ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் பல்லார்டு முதியவர்கள் ஏதேனும் ஒரு பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுத்து, ஓய்வு நேரத்தில் சும்மா உட்கார்ந்திராமல் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்கிறார். நம்மால் என்ன முடியும் என்று ஓய்ந்து விடாமல் புதுப்புது சவால்களை எதிர்கொண்டு சுறுசுறுப்பாக செயல்பட்டால் மூளை ஆரோக்கியமாக இருக்கும் என்கிறார்.

கலை........வயது அதிமாகும் போது உடம்பில் பல பலவீனங்கள் தோன்றும். கண்பார்வை பிடிக்காது. காது சரிவர கேட்காது. அப்படித்தனே.

ராஜா........ஆமாம். முதியவர்களுக்கு காது சரிவர கேட்காமல் போவதைத் தடுக்க இங்கிலாந்தின் காது கேளா ஆராய்ச்சி அமைப்பின் தலைமை நிர்வாகி விவியன் மைக்கேல் சில எளிய யோசனைகளைக் கூறுகிறார் கேளுங்கள்.

வானொலி தொலைக்காட்சியின் ஒலி அளவைக் குறைக்க வேண்டும். நைட்கிளப் போன்ற இரைச்சல் அதிகமாக உள்ள இடங்களுக்குப் போகக் கூடாது என்று கூறிவிட்டு 60க்கு 60 என்று ஒரு குறிப்பு சொல்கிறார்.

கலை.......அது என்ன 60க்கு 60?

ராஜாஜ........அதாவது இசைகேட்கும் போது அதிகபட்ச ஒலி அளவில் 60 விழுக்காட்டுக்கு மேல் பலமாக வைக்கக் கூடாது. அப்புறம் தொடர்ந்தாற்போல் 60 நிமிடங்களுக்கு மேல் இசை கேட்கக் கூடாது. டாக்டர் சிமோன் டில் என்கிற மூட்டு நோய் நிபுணர் என்ன சொல்கின்றார் தெரியுமா?

தினமும் தொலைக் காட்சி பார்க்க செலவிடும் நேரத்தில் ஒரு மணி நேரத்தைக் குறைத்துக் கொண்டு அந்த நேரத்தில் பயனுள்ள ஏதாவது செய்யுங்கள். அப்போது உங்களுடைய உடம்பில் இயக்கம் எதிகரிக்கும். மற்றவர்களுடன் உங்கள் தொடர்பு அதிகரிக்கும். இது நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வழி வகுக்கும்.

கலை........மூட்டுவலி என்னும் போது ஒன்று நினைவுக்கு வருகின்றது. முதியவர்கள் அடிக்கடி காலைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விடுகிறார்கள்.

ராஜா........இதை வாதநோய் என்று சொல்வார்கள். இது வராமல் தடுக்கத் தான் தொடர்ந்து முறையான நடைப்பயிற்சி செய்ய வேண்டும். ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கக் கூடாது என்கிறார்கள். மேலும் எலும்புத் தேய்வு என்ற நோயும் ஏற்பட்டு முதுமையில் கால்வலி தரும். இதைத் தடுப்பதற்கு 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு ஏதாவது வலி ஏற்பட்டு அது நீடிக்குமானால் GLUCOSAMINE மற்றும் CHONDROITIN என்ற மாத்திரைகளை தினமும் உட்கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்தின் பிளைமவுத் மருத்துவமனையின் முடநீக்கி அறுவைச்கிச்சை நிபுணர் சிமோன் கோலரிட்ஜ் கூறுகிறார். 60 வயதைத் தாண்டியவர்களில் 70 விழுக்காட்டினருக்கு ஏதாவது ஒரு வகையில் எலும்புத் தேய்வு ஏற்படும் என்கிறார்.

கலை.......அப்புறம், அலர்ஜி என்கிறார்களே. ஒவ்வாமை நோய் அது பலரைப் பாதிக்கிறது. இடைவிடாத இருமல், தும்மல் ஏற்பட்டு சளி பிடிக்கிறது. இது பற்றி என்ன சொல்கிறார்கள்?

ராஜா......இங்கிலாந்தின் ஒவ்வாமைத் தடுப்பு இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் முரியல் சிம்மன்ஸ் என்ன சொல்கிறார் தெயுமா? வீட்டைச் சுத்தமாக தூசுதும்பு இல்லாமல் வைத்திருங்கள். ஜன்னல்களைத் திறந்து விடுங்கள். காற்றும் வெளிச்சமும் உள்ளே நுழையட்டும். குளிர்காலத்தில் தேவைக்கு அதிகமாக அறையை வெப்பப்படுத்த வேண்டாம். கடைசியாக வீட்டை சுத்தப்படுத்த ரசாயனப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட செயற்கை வாசனைத் தெளிப்பான்களை பயன்படுத்தாதீர்கள். வினிகர் கொண்டு சுத்தப்படுத்தினாலே போதும்.

கலை.......சரி நேயர்களே இந்த நிகழ்ச்சியில் கூறப்பட்ட உடல் நலப்பாதுகாப்புக் குறிப்புக்களை கவனமாகப் பின்பற்றுங்கள். நாம் நலமுடன் வாழ வேண்டும். மற்றவர்களையும் நலமாக வாழ வைக்க வேண்டும். வணக்கம்.