• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-24 21:43:32    
நூடல்ஸ் கேக் தயாரிப்பு முறை

cri
கலை.......முதலில் நன்றாக கொதித்த வென்னீரில் ரெடிமேட் நூடல்ஸ் போட வேண்டும். 2 நிமிடம் ஊறிய பின் இந்த நூடல்ஸை வெளியே தட்டில் எடுத்து வையுங்கள். கீரை சிறிய சிறிய துண்டாக நறுக்க வேண்டும். பின் சிறிய தட்டில் எடுத்து வையுங்கள்.

ராடா.......இதற்கிடையில் முட்டையை என்ன செய்வது?

கலை.......பொறுமையுடன் காத்திருந்து கேளுங்கள். மக்காச் சோளம் பீன்ஸ் காய் கேரட் ஆகியவற்றை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். பின் மக்காச்சோளத்தை ஒவ்வொன்றாக உதிர்த்து தட்டில் வைக்க வேண்டும்.

ராஜா.......மக்காச் சோளத்தை அப்படியே நூடல்ஸுடன் இணைக்க முடியுமா?

கலை........அப்படி செய்வது இல்லை. முதலில் பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். மஞ்சள் மற்றும் வெள்ளை கருப் பகுதியை நன்றாக கலக்க வேண்டும். பின் மக்காச் சோளம், பீன்ஸ் காய் கேரட் ஆகியவற்ரறை முட்டை சாற்றில் போட்டு நன்றாக கலக்க வேண்டும். பின் தயாரிக்கப்பட்ட நூடல்ஸையும் போட்டு தக்காளிசாஸ் உப்பு, மிளகாய் தூள் ஆகியவற்றையும் சேர்த்து நூடல்ஸுடன் நன்றாக கலக்க வேண்டும்.

ராஜா......நன்றாக கலந்த பின் என்ன செய்ய வேண்டும்?

கலை.......அப்போது அடுப்பின் மேல் வாணலியை ஏற்றி சூடானதும் உணவு எண்ணெய் கொஞ்சம் ஊற்றுங்கள். எண்ணெய் சூடானதும் நூடல்ஸை வாணலியில் மெதுவாக ஊற்றுங்கள்.

ராஜா.....அப்போது அடுப்பில் தீ எந்த நிலையில் இருக்கணும்?

கலை.......தீசை லேசாக எரியவிட்டு வாணலியில் ஊற்றிய நூடல்ஸ் மாவு போட வேண்டும். முட்டை அடுப்பின் மேல் கேக் யாகிய பின் நல்ல மணம் வீசும். அப்போது கீரை துண்டுகளை நூடல்ஸ் கேக் மேல் தூவுங்கள்.

ராஜா.......நல்ல மணம் வீசும் போது வெந்துவிட்டதற்கான அறிக்குறி தெரிகின்றது. அப்படிதானே.

கலை.....ஆமாம். தட்டின் மேல் இந்த நூடல்ஸ் கேக் வையுங்கள். இந்த நூடலஸ் கேக்கின் இன்னொரு பெயர் சீன பிட்சா.

ராஜா......பார்க்க அழகானது. சமைக்கும் முறைதான் என்னை பொறுத்தவரை சிக்கலானது.

கலை......ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இதில் செழுமையான சத்து உள்ளது. வாழ்க்கையில் மக்களுக்கு மகிழ்ச்சியும் உடல் நலமும் தரும் உணவு இது தான்.

ராஜா........கலை நீங்கள் சொன்னது சரிதான் நண்பர்களே நீங்களும் சோதனை முறையில் சமைத்துப் பாருங்கள். ருசி எப்படி ஒரு வரி எழுதுங்கள்.

கலை........சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி நேரமாகிவிட்டது. இன்று அறிமுகபடுத்திய நூடல்ஸ் கேக் சமைத்து தேஸ் பாருங்கள்.