• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-26 11:41:22    
நான் என்ன செய்ய வேண்டும்--திருச்சி காஜாமலை ஜி, பிரபாகரன்

cri
நான் வாழும் இந்திய நாட்டிற்கும் எமது நட்பு நாடான சீன நாட்டிற்கும் இடையே நட்புறவுக்கு பற்பல செயல்களை செய்ய ஆசை இருக்கின்றது. ஆனால் இரு அரசுகளும் செய்யக் கூடிய திட்டங்களுக்கு இணையான அளவு உயர்ந்த பதவியினை நான் வகிக்கவில்லை. சாதாரண இந்தியக் குடி மகன் என்ற முறையில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஏராளமான திட்டங்கள் உள்ளன. அதே போல எனது வசதிகளுக்கும் பொருளாதார நிலைக்கும் ஏற்ப சில சாதனைகளை செய்ய முடியும். ஒவ்வொரு இந்திய குடிமகனும் சீனக் குடிமகனும் மனது வைத்தால் இரு நாடுகளையும் வல்லரசு நாடாக மாற்ற முடியும். அதுமட்டுமல்ல நட்புக்கு இலக்கணமாக உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இரு நாடுகளும் நட்பாக இருந்து பல சாதனைகளை புரிய முடியும்.

என்பார்வையில் சீனத்து உறவு.......

நான் படிக்கும் பருவத்தில் சீன நாட்டை பற்றி 3 தகவல்கள் தெரியும். சீனப் பெருஞ்சுவர், சீன கம்யூனிச நாடு, மிதி வண்டிகள் அதிகம் உள்ள நாடு ஆகியன ஆழமாக என் மனதில் பதிந்தவை. எனவே அப்பொழுது முதலே இந்திய குடிமகனான எனக்கு சீனாவின் நட்புறவை பலப்படுத்த என்னால் முடியுமா? என்ற ஆவல் ஏற்பட்டது. அந்த ஆவல் எனது நண்பர் முசிறி அய்யம்பாளையம் எஸ் எஸ் ஹரிதாஸ் மூலம் நிறைவேறியது. எனது ஆசான் மணமேடு திரு எம் தேவராஜா அவர்களை அறிமுகப்படுத்தி திருச்சி மாவட்ட சீன வானொலி நேயர் மன்றத்தில் இணைய உதவி செய்தார். நட்புறவுக்கு ஒரு ஏணியாக எமது மன்றத்தை பயன்படுத்தி சீனாவை பற்றி பல்வேறு தகவல்களை அறிந்து கொண்டேன். இப்படியாக என் பார்வையில் சீனத்து உறவு வளர்ந்து வருகின்றது.

நான் என்ன செய்ய வேண்டும்.........

முதலில் எனது குடும்பத்தினரை சீ.வா. கேட்கச் செய்ய வேண்டும். சீனாவைப் பற்றி பல தகவல்களை திரட்டி பிறர் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்க வேண்டும. உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சீனாவைப் பற்றி அறியத்தர வேண்டும். அதோடு மட்டுமல்ல சீனர்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள். அத்தகைய பண்பைப் பின்பற்ற வேண்டும். பலரையும் சீன வானொலி கேட்கச் செய்து சீனத்து பண்புகளை இந்திய உள்ளங்கள் பின்பற்றும் பொழுது இதனை விட சிறப்பாக நட்புறவை வளர்க்க வேறு வழிகள் இல்லை.

மன்றக் கூட்டங்களை நடத்தி புதிய புதிய நேயர்களை உருவாக்கி அவர்களிடமும் சீனாவின் பெருமைகளை கூறி நட்புறவை வளர்க்க உறுதுணையாக இருக்க வேண்டும்.

பொது விழாக்களில் பரிசுகள் வழங்குதல், சீன வானொலி தமிழ் பிரிவு நிகழ்ச்சிகளையும் அறிமுகப்படுத்துதல், இப்படியாக நட்புறவை வளர்க்க எனக்கு ஆசைகளும் உண்டு. திட்டங்களும் உண்டு. எனது மனது சிறிய இடத்தில் இருந்தாலும் வாசனைத் திரவியம் போல காற்று செல்லுமிடமெல்லாம் என் மனம். செல்லக் கூடிய அளவு பரந்து விரிந்தது. அன்றாட பணிகள், குடும்பப் பணிகள், அலுவலகப் பணிகளுக்கு இடையே முழுமையாக என்னால் ஈடுபட முடியாவிட்டாலும் ஒரு நாளில் ஒரு மணி நேரம் வரையும் விடுமுறை நாட்களில் முழுமையாகவும் நுட்புறவுக்கான பணிகளை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

நான் என்ன செய்ய முடியும்..

எந்த உதவியும் வழியும் அந்தஸ்தும் இல்லாத நிலையில் உன்னால் முடியும் என்று எனது மனத்துக்குள் ஏற்பட்ட எண்ணத்திற்கேற்ப திருச்சி மாவட்ட சீன வானொலி நேயர் மன்றம் உதவி செய்தது. என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தேனோ அதில் முதற்கட்டமாக எனக்கு கிடைத்தவெற்றி தமிழ் பிரிவுக்கு ஆற்றிய பணிகளின் காரணமாக எமது மன்றத்தின் உறுப்பினர்கள் வழங்கிய பதவி துணைத் தலைவர்.

நேயராக சேர்ந்தது முதல் தினமும் செய்திதாள்களை வாங்கி சீன நாட்டு செய்திகளை கத்தரித்து ஆல்பம் தயார் செய்து வருகின்றேன்.

தமிழ் பிரிவு எனக்கு அனுப்பும் புத்தாண்டு வாழ்த்து அட்டைகள், வண்ண அட்டைகள், காகிதகத்தரிப்பு மற்றும் நிகழ்ச்சி நிரல் அட்டைகளை பலருக்கும் வழங்கி அறிமுகப்படுத்துகின்றேன். சீனப் பெருஞ்சுவர் திரை பெரிய அளவில் மற்றும் வண்ண பூக்களால் CRI என பொறிக்கப்பட்ட அட்டைகளை வரவேற்பு அறையில் வைத்துள்ளேன். இதனை பார்ப்பவர்களுக்கு சீனத்து பெருமைகளை கூறி வருகின்றேன்.

இதுவரை 2 கருத்தரங்குகளில் கலந்து கொண்டதால் பல நேயர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. குறிப்பாக சீனத் தயாரிப்பு வானொலி பெட்டிகள் பற்றி தமிழ்பிரிவு நிகழ்ச்சியில் நான் கூறியதால் 20 வானொலி பெட்டிகள் வாங்கிக் கொடுத்துள்ளேன். நான் பெரும்பாலும் பயன்படுத்தும். எழுதுகோல் கணக்கிடும் கருவி, கண்கண்ணாடி, மின் விசிறி, துணி தேய்க்கும் கருவி இப்படியாக பலப்பல.

எனது இரு சக்கர வாகனத்தில் CRI என விளம்பரம் செய்து உள்ளேன். இதனால் பலரும் விளக்கம் கேட்கிறாக்ள். இதனால் நான் பெருமை அடைகின்றேன். என்னாலும் சீன இந்திய நட்புறவுக்கு துணை புரிய முடிகின்றது என்பதே மகிழ்வான நிகழ்வுதான்.

முடிவுரை......

என்னை நலம் விசாரிப்பவர்கள். முதலில் சீனா வானொலி நிகழ்ச்சியில் தங்களின் ஈடுபாடு எப்படி உள்ளது. தற்போதைய சிறப்புகள் என்ன என்று விசாரிக்கிறார்கள். எனக்கு அறிமுகமாகாத நண்பரை அவருக்கு என் நண்பர் அறிமுகம் செய்யும் பொழுது இவர் சீன வானொலி நேயர் பல நிகழ்ச்சி வழங்கியுள்ளார். சீனாவிலிருந்தும் இவரிடம் பேசுவார்கள். அவர்கள் அனுப்பும் பல வண்ண அட்டைகள் ஆகியன எனக்கு கொடுத்துள்ளார் என்று கூறுவர். ஆக என்னைப் பார்க்கும் ஒருவர் என்னை மறந்து நான் கேட்கும் சீன வானொலி தமிழ் பிரிவு பொருமைகளையும் சீனத்து உள்ளங்களையும் பற்றி விசாரிக்கும் பொழுது இரு நாட்டுக்கும் உள்ள நட்புறவுக்கு என்னாலும் பணியாற்ற முடிகிறதே என்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

எனக்கு இத்தகைய தலைப்பைக் கொடுத்து நான் ஆற்றிய பணிகளை தெரியப்படுத்த வாய்ப்பு வழங்கிய தமிழ் பிரிவுக்கு கோடானு கோடி நன்றிகள். ச்சை சியென்