ஆஸ்திரியாவில் "சீன திபெத் பண்பாட்டு வாரம்"
cri
"2006·சீன திபெத் பண்பாட்டு வாரத்தின்" முக்கிய கொண்டாட்டம் நேற்று ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் துவங்கியது. ஆஸ்திரியாவின் பல்வேறு முக்கிய செய்தி ஏடுகள், இது பற்றி முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆஸ்திரிய-சீன நட்புறவு சங்கத்தின் துணை தலைவர் புகோவ்ஸ்கி புகைபடங்கள் மற்றும் பொருட்காட்சியைப் பார்வையிட்டார். சீனாவின் இதர பிரதேசங்களை விட விரைவாக திபெத்தில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை, அவை முழுமையாக எடுத்துக்காட்டுகின்றன என்றார், அவர். 19 நாடுகளைச் சேர்ந்த நூறு நிழற்பட வல்லுநர்கள் திபெத் போய் பிடித்துள்ள 200க்கும் அதிகமான படங்களும் திபெத்தின் மதம், திபெத்திய மருத்துவம், மருந்து, திபெத் தேசிய இன வரலாறு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் 15 Tang kaகளும் இப்பொருட்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. சீனாவுக்கான ஆஸ்திரிய தூதராக இருந்த புகோவ்ஸ்கி பேசுகையில், பண்பாட்டுத் தொடர்புகள் தப்பு எண்ணத்தை நீக்கும் பயனுள்ள வழிமுறை என்றும், "சீன திபெத் பண்பாட்டு வாரத்துக்கு" பெரும் கடமை உண்டு என்றும் அவர் சொன்னார்.
|
|