சீனாவில் புதிய திட்டப்பணிகளுககான முதலீட்டு அதிகரிப்பு குறைவு
cri
இவ்வாண்டின் முதல் ஒன்பது திங்களில், சீனாவில் புதிய திட்டப்பணிகளுக்காக மொத்தம், 4 லட்சத்து 86 ஆயிரம் கோடி யுவான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 7.5 விழுக்காடு அதிகமாகும். ஆனால் இவ்வாண்டின் முதல் ஆறு திங்களில் இருந்ததை விட 14.7 விழுக்காடு குறைந்துள்ளது. சீனாவில் புதிதாக துவக்கப்படும் திட்டப்பணிகளின் எண்ணிக்கையை கண்டிப்பான முறையில் கட்டுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இவ்வாண்டின் முதல் ஆறு திங்களில், சீனாவில் முதலீடு கணிசமாக உயர்ந்துள்ளது. புதிய திட்டப்பணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் திங்கள் முதல், புதிதாக துவங்கிய திட்டப்பணிகளை ஒழுங்குபடுத்துமாறு மத்திய அரசு பல்வேறு மாநில அரசுகளைக் கோரியுள்ளது.
|
|