வாணி: மும்பை கோரேகாவுன் கிழக்கு எஸ். ஞானஜோதி ஜூலை 26ம் நாளன்று ஒலிபரப்பான நிகழ்ச்சிகள் குறித்து எழுதிய கடிதம். புதிய மத்திய கிழக்கு என்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கோண்டலீசா ரைஸ் அம்மையாரின் திட்டம் பற்றிய செய்தித் தொகுப்பைக் கேட்டேன். இத்திட்டம் பற்றிய உண்மையை நாசூக்காக எடுத்து கூறினீர்கள். அமெரிக்காவின் உள்நோக்கம் அறிய முடிந்தது. அன்றைய நேயர் நேரம் நிகழ்ச்சி நிதானமாகவும், விளக்கமாகவும் அதிக அளவிலும் அமைந்து எங்களுக்கு ஊக்கமளித்தது என்று எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: அடுத்து இலங்கை காத்தான்குடி ஏ.ஆர்.ஏ.ரஸான் எழுதிய ஜூலை 28ம் நாள் இடம்பெற்ற நட்புப்பாலம் நிகழ்ச்சி பற்றிய கடிதம். இந்தியன் கிச்சன் உணவகத்தின் உரிமையாளர் அந்தோனி அவர்களின் வாழ்க்கை பற்றிக் கேட்டேன். சீனாவில் அவரது வாழ்க்கை அனுபவங்கள் அறிந்தேன். அவரது கருத்துக்கள் சிறப்பாக அமைந்தன. மேலும் சீனத் தமிழொலியின் 11வது இதழில் தமிழக நேயர் எஸ்.எம்.ரவிசந்திரனின் சீனப்பயணம் பற்ரியும். அவரது அனுபவங்களை பற்ரியும் எடுத்துரைத்த கட்டுரைகளை படித்து மகிழ்ந்தேன் என்று எழுதியுள்ளார்.
வாணி: அடுத்து ஜூலை 31ம் நாள் இடம்பெற்ற சிறப்பு நிகழ்ச்சி பற்றி ஈரோடு எஸ்.கே.பாப்பம்பாளையம் பி.டி.சுரேஷ்குமார் எழுதிய கடிதம். தமிழ்ப்பிரிவின் 43ம் ஆண்டு நிறைவு தொடர்பான சிறப்பு நிகழ்ச்சியில் வாணி அவர்கள் கூறிய சந்திர விழா பற்றிய கதை நன்றாக இருந்தது. கணவன் மனைவி இருவரும் இணைந்து வாழ்ந்தால்தான் வாழ்க்கை இன்பமாக அமையும் என்பதை கதையின் மூலம் அறியத்தந்தமைக்கு நன்றிகள் என்று எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: அதே நிகழ்ச்சி குறித்து மேற்பனைக்காடு கிழக்கு ஆ.வேல்சாமி, அமுதா வேல்சாமி ஆகியோர் எழுதிய கடிதத்தில், கலையரசி அவர்களும், தமிழ்செல்வம் அவர்களும் விழுப்புரத்திலிருந்து தஞ்சாவூர் சென்றபோது ஏற்பட்ட அனுபவம், காபி, மன்னிப்பு ஆகியவற்றை கேட்டபோது மகிழ்ச்சி அடைந்தோம். தஞ்சையிலிருந்து விடைபெற்று புறப்பட்டபோது மகிழ்வோடு அளவளாவி பேட்டியளித்து சென்றதெல்லாம் பசுமையான நினைவுகளாக நெஞ்சில் அலைமோதுகின்றன. சீனப்பாடல்களை இசையுடன் பாடி எம்மை மகிழ்ச்சி கடலில் மிதக்கவிட்ட தமிழ்பிரிவு பணியாளர்கள் அனைவரையும் பாராட்டுகிறோம். உங்களோடு அமர்ந்து இருந்தது போன்ற உணர்வை பெற்றோம் என்று கூறியுள்ளார்.
வாணி:அடுத்து சேலம் ஏ. வேலு ஆகஸ்ட் 10ம் நாள் இடம்பெற்ற நிகழ்ச்சிகள் குறித்து எழுதிய கடிதம். செய்தி அறிக்கை மற்றும் ஒலிம்பிக் வானொலி அலைவரிசை துவக்கபட்டமை பற்றிய செய்தித் தொகுப்பு, யசுக்குனி கல்லறையில் அஞ்சலி செலுத்துவது தொடர்பான செய்தித் தொகுப்பு ஆகியவற்றை கேட்டோம். கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் சீன இந்திய நட்புறவு கட்டுரை போட்டியின் கட்டுரை ஒன்றும் கேட்டோம். புதிய பல தகவல்களை நிகழ்ச்சியின் வாயிலாக அறிந்தோம் என்று எழுதியுள்ளார்.
|