• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-16 19:53:35    
சீனாவின் கடற்கரை நகரான தாலியென் நகரம்

cri

வட சீனாவின் ஒரு தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ள தாலியென் நகரத்தின் மூன்று பக்கங்கள் கடலால் சூழப்பட்டுள்ளன. தாலியென் நகரம் மிகவும் சுத்தமானது. புல் தரைகள் சங்கிலித் தொடர் போல, 4 பக்கங்க களிலும் நீண்டுள்ளன.

ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ள வீதிகளில் நடந்துசெல்லும் பயணிகள் அருகிலுள்ள கடலைக் காணலாம். தாலியென் நகரின் நவீன பொருட்காட்சியகம், சிங்ஹைய் வளைகுடா சதுக்கத்தில் அமைந்துள்ளது.

பழைய தாலியென் காட்சி, புதிய தாலியென் காட்சி என இரண்டு பகுதி காட்சிகள் பயணிகளுக்கு 2 உணர்வை ஏற்படுத்தி, தாலியென் மக்களின் வாழ்க்கை மாற்றத்தைத் தெளிவாகப் பிரதிபலித்துள்ளன.

இந்தப் பொருட்காட்சி மக்களுக்குச் சோதனை முறையில் திறந்துவிடப்பட்ட போதே, உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் வரவேற்பைப் பெற்றது என்று இப்பொருட்காட்சியகத்தின் தலைவர் லீசிங்வெய் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, நாள்தோறும் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். இந்தப் பொருட்காட்சியகத்தில் நுழைந்த பின்னர் தாலியென் நகரம் முழுவதையும் பார்வையிட்டுள்ள உணர்வு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர் என்றார்.

நவீன பொருட்காட்சியகம் பற்றி அறிமுகப்படுத்தியுள்ளோம். அடுத்து, தாலியென் கடற்கரைத் துருவப் பகுதியில் அமைந்துள்ள கடல் காட்சியகம் பற்றி கூறுகின்றோம். நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, இந்தக் கடல் காட்சியகத்தில் கடல் சிங்கம் கூச்சலிடும் குரல்.

2002ஆம் ஆண்டில் துவங்கிய இந்தக் காட்சியகம், சீனாவில், துருவப் பகுதியைத் தனிச்சிறப்பாக வெளிப்படுத்தும் நவீன சர்வதேச காட்சியகம் ஆகும். தென் துருவப் பகுதியில் வாழும் பென்குயின், வட துருவப் பகுதியில் வசிக்கும் திமிங்கலம் உள்ளிட்ட துருவப் பகுதியிலுள்ள விலங்குகள் முதல் முறையாக தாலியென் நகருக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த கடல் காட்சியகத்தில் நுழைந்ததும், கடலுக்கு கீழுள்ள ஒரு உலகத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. பெரிய, சிறிய கண்ணாடிப் பெட்டிக்குள் பல்வகை கடல் பிராணிகள் காணப்படுகின்றன.

இந்தக் கடல் காட்சியகத்தின் பணியாளர் லீ ஏமின் அம்மையார் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள்ளேயுள்ள ஒரு வெண்ணிற திமிங்கிலத்தைச் சுட்டிக்காட்டிய வண்ணம், இது, இந்தக் காட்சியகத்தில் பிரதிநிதித்துவம் வாய்ந்த விலங்கு என்று கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, இப்போது நாம் கண்ட விலங்கு, துருவப் பகுதி காட்சியகத்தில் பிரதிநிதித்துவம் வாய்ந்த விலங்கு. எங்களுடைய மங்களச் சின்னமாக விளங்கும் வெண்ணிற திமிங்கிலமும் ஆகும். அது விரும்பத் தக்கது என்றார் அவர்.

வட ஆர்க்டிக் கடலில் வாழும் இத்தகைய திமிங்கலத்தின் உடல் நிறம் மிகவும் வெண்மை. மக்களுக்கு வரவேற்பைத் தெரிவிப்பது அதற்குத் தெரியும். தவிர, தலையை அசையவும் புன்னகை காட்டவும் தெரியும்.

அதற்கும் இதர திமிங்கலங்களுக்குமிடையில் மிக பெரிய வித்தியாசம் எனவென்றால், அதன் கழுத்து தாளாரமாக அசைய முடியும் என்பதாகும். அதனால் வேறுபட்ட குரலில் ஒலி செய்ய முடியும். குரல் மிகவும் இனிமையானது என்றார் அவர்.

தாலியென் கடற்கரைத் துருவப் பகுதியில் அமைந்துள்ள கடல் காட்சியகத்தின் பரப்பளவு 36 ஆயிரம் சதுரமீட்டர் ஆகும். துருவப் பகுதியில் வாழும் விலங்குகள், முதல் பகுதி காட்சியகத்தில் உள்ளன.

தென் மற்றும் வட துருவப் பகுதியிலுள்ள கடல் விலங்குகள் இதில் முக்கிய இடம்பெற்றுள்ளன. செயற்கைத் துருவப் பகுதி சூழலிலுள்ள வெண்ணிற திமிங்கலம், வட துருவப் பகுதி கரடி, தென் துருவக் கடல் பகுதியில் வாழும் பறவை வகை, கடல் நாய் உள்ளிட்ட 10க்கும் அதிகமான விலங்குகளைப் பயணிகள் கண்டுகளிக்கலாம்.

2வது பகுதி காட்சியகத்தில் துருவப் பகுதியில் வாழும் கடல் விலங்குகளின் அரங்கேற்றம் காணப்படலாம். ஈராயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் அமரக் கூடிய டியெட்டில் killer, வெண்ணிற திமிங்கலம், dolphin, கடல் சிங்கம்

உள்ளிட்ட கடல் விலங்குகளின் அரங்கேற்றத்தைக் கண்டுகளிக்கலாம். 3வது பகுதி காட்சியகத்தில்(shark)சுறா மீன்கள் உள்ளன. பெரிய ரக நீர் தொட்டிலில் பத்து வகைக்கும் அதிகமான சுறா மீன்களைக் காணலாம். அத்துடன், மக்களும் சுறா மீனும் நீரில் விளையாடும் பயம் தரும் காட்சியைப் பயணிகள் ரசிக்கலாம்.