• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-27 21:39:03    
சூ மைய்

cri

சீன வானொலி நிலையம், இன்றைய சீன மகளிர் நிகழ்ச்சியில் தாவூல் சிறுப்பான்மை தேசிய இனத்தை சேர்ந்த சூ மைய் அம்மையார் பற்றி அறிமுகப்படுத்துகிறோம். தாவூல் சிறுப்பான்மை தேசிய இனம், சீனாவின் 56 தேசிய இனங்களில் மிகவும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டது. இந்த இனத்து மக்கள், துணிச்சலானவர்கள், மனமார்ந்த, நீண்டநெடும் வரலாற்றில் ஒளிமயமான தேசிய பண்பாட்டை உருவாக்கியவர்கள். தற்போதைய நவீன சோஷலிஸம் வளர்ச்சியில், தமது தேசிய இனத்தின் பண்பாட்டை பாதுகாத்து வெளிப்படுத்துவதில் அவர்கள் அக்கறை செலுத்துகின்றனர். சீனாவின் வட கிழக்குப் பகிதியில் இருக்கின்ற ஒரே ஒரு தாவூல் இன தன்னாட்சி வட்டாரமான மோலிதாவா, 1998ம் ஆண்டு, இம்மாவட்டத்தில் 3800 சதுரக்கிலோமீட்டர் நிலப்பரப்பில் பொருட்காட்சியகம் நிறுவப்பட்டது.

அதில் 800 சதுரகிலோமீட்டர் பரப்பில். மக்களின் பழக்கவழக்கங்கள் பற்ரிய அராங்கு உள்ளது உறை, தாவூல் இனத்தைச் சேர்ந்த கைவினை பொருள் தயாரிப்பாளர்கள் ஈடுப்பட்டுடன், கற்றுக் கொண்டு, தமது தொழில் நுட்பத்தை உயர்த்தி, தமது தேசிய இனத்தின் கைவினைக் கலைகளை வளர்த்து வருகின்றனர். இந்த பண்பாட்டு அலுவலகத்தில், காகிதக் கத்தரிப்புக் கலையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தாவூல் இனத்தைச் சேர்ந்த கலைஞர் சூமே அம்மையாரை சந்தித்தோம். அவள், 30 வயதுக்கு மேற்பட்டவர். ஆனால் 400க்கு அதிகமான கலைப் பொருட்களை செய்துள்ளார். 1994ம் ஆண்டு முதல், 2005ம் ஆண்டுவரை, தமது கலைப்பொருட்களுக்கு, மாவட்டம், மாநிலம், நாடு ஆகிய நிலைகளில் பரிசுகள் வழங்கப்பட்டன. 2004ம் ஆண்டு சீனாவின் மேற்கு பகுதியின் பண்பாட்டு விழாவில், அவரது கலைப் படைப்பு தேசிய தங்க பதக்கம் பெற்றது. 2005ம் ஆண்டு, சீனாவின் சியே ஹே கோப்பை என்னும் காகித கத்தரிப்புப் போட்டியில்,சிவப்புக் கொண்டை கொக்கு என்ற கதையைச் சித்திரிக்கும் கலைபப் படைப்பு, சிறப்பு பரிசு பெற்றது. நாட்டின் வெவ்வேறான வட்டாரங்களில் தமது 200க்கு அதிகமான கலை பொருட்களின் பொருட்காட்சியை அவர் நடத்தியுள்ளார். பெற்றுள்ள சாதனை குறித்து, அவர் அடக்கமாக இருக்கிறார். நான் சிறப்பாக காகித கத்தரிப்புக்கலையைக் கற்றுக் கொள்ளவில்லை.

சிறிய வயதில் காகித கத்தரிப்பு எனக்கு மிக பிடிக்கும். தாவூல் சிறுப்பான்மை தேசிய இனத்தின் பெண் குழந்தைகளுக்கு காகித கத்தரிப்பு மிகவும் விருப்பமானது. தாவூல் இனத்தின் மக்களின் பழக்கவழக்கங்கள் அவர்கள் செய்யும் பொருட்களில் வெளிப்படுகின்றன. உழைப்பு வாழ்க்கை, ஆடல் ஆகிய துறைகளுடன் தொடர்புடையன. குறிப்பாக மகளிர் உழைப்பு வாழ்க்கை அவர்களின் படைப்புக்களில் சித்தரிக்கப்படுகிறது.