
தாலியென் நகரம், சீனாவில் நீரூற்றுக்களும் சதுக்கங்களும் மிக அதிகமாக இருக்கும் நகரம் மட்டுமல்ல, மக்கள் வசிப்பதற்கு தகுதி மிக்க நகரமாகவும் ஐ.நாவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தாலியென் கடற்கரைத் துருவப் பகுதியில் அமைந்துள்ள கடல் காட்சியகத்தின் பரப்பளவு 36 ஆயிரம் சதுரமீட்டர் ஆகும். துருவப் பகுதியில் வாழும் விலங்குகள், முதல் பகுதி காட்சியகத்தில் உள்ளன.
2வது பகுதி காட்சியகத்தில் துருவப் பகுதியில் வாழும் கடல் விலங்குகளின் அரங்கேற்றம் காணப்படலாம். 3வது பகுதி காட்சியகத்தில்(shark)சுறா மீன்கள் உள்ளன. பெரிய ரக நீர் தொட்டிலில் பத்து வகைக்கும் அதிகமான சுறா மீன்களைக் காணலாம்.
4வது பகுதி காட்சியகம், துருவப் பகுதி சூழ்நிலையை உணரும் இடம் ஆகும். செயற்கை முறையில் வெப்ப நிலை பூஜியத்துக்குக் கீழ் சுமார் 40 டிகிரி செல்சியஸ் உறைபனி உலகில் உறைபனியால் மூடப்படும் தென்-வட துருவப் பகுதியிலுள்ள கடும் குளிரைப் பயணிகள் நேரடியாக உணரலாம்.

மேலே கூறியதைத் தவிர, ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தாலியென் சர்வதேச ஆடை விழா, தாலியென் ஏற்றுமதி வணிகப் பொருட்காட்சி, தாலியென் pagoda tree விழா, தாலியென் சர்வதேச மராதன் போட்டி, தாலியென் வாண வெடிப்பு விழா ஆகியவை ஆயிரக்கணக்கான உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்த்துள்ளன.
விழா நாட்களில் ஜப்பான், வட கொரியா, ரஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வேவ்வேறான ஆடைகளை அணிந்துகொண்ட நாட்டுப்புறக் கலைஞர்கள், தாலியென் மக்களைப் போல இந்நகரவாசிகளுடன் இணைந்து வீதிகளில் ஆடிபாடுவது வழக்கம்.
அவர்களுடைய வருகையினால், தாலியென் நகருக்குப் பல்வேறு நாடுகளின் தனிச்சிறப்புகள் தரப்பட்டுள்ளன. தாலியென் நகருக்கு முதல் தடவையாக வந்த பயணி லீஹொன் கூறியதாவது,
தாலியென் நகரம் நல்லது. நான் இங்கே வருவது இதுவே முதல் முறை. கடற்கரையைப் பார்வையிட்டிருக்கிறேன். தாலியென் நகரில் பல சதுக்கங்கள் உள்ளன. சில கட்டடங்கள் சிறப்பாக உள்ளன. தாலியென் நகரில் தங்கியிருக்கும் நேரம் குறைவு. இதனால் வருத்தம். இனி வாய்ப்பு இருந்தால் மீண்டும் வர விரும்புகின்றேன் என்றார் அவர்.

எப்படி?நேயர்களாகிய உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், சீனாவுக்கு வந்து தாலியென் நகரிலும் சுற்றுலா மேற்கொள்ளுங்கள். ஆனால், அதிக நேரத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். சீனப் பயணி லீஹொன் போல ஏமாற்றம் அடைய வேண்டாம்.
இனி சுற்றுலா பற்றிய தகவலை வழங்குகின்றோம். தாலியென் நகரில் சுற்றுலா வசதி. விமானம், ரயில் வண்டி, பேருந்து(coach)ஆகியவற்றின் மூலம் தாலியென் நகரம் சென்றடையலாம். பல்வேறு பருவங்களில் தாலியென் நகரில் வேறுபட்ட காட்சிகள் காணப்படலாம்.
சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் பொருட்காட்சியகத்தையும் கடல் காட்சியகத்தையும் பார்வையிடலாம். தாலியென் நகரில் வேறுபட்ட பாணியில் கட்டப்பட்ட கட்டங்களைக் கண்டுகளிக்கலாம். திவர, தனிச்சிறப்பு வாய்ந்த உணவு வகைகளை உண்ணலாம்.
எடுத்துக்காட்டாக, இறால், கடல் உணவுப் பொருளுடன் கூடிய நூடிஸ், பீர் நண்டு ஆகியவை குறிப்பிடத் தக்கவை. வீதிகளிலுள்ள அங்காடிகளில் இத்தகைய சிற்றுண்டிகளை உண்பது விலை மலிவு. ஒருவருக்கு 50 ரன்மின்பி யுவான் செலவழித்தால் தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படும்.

சாங்காய் பழைய வீதி சாங்காய் பழைய வீதியில் தொன்மை வாய்ந்த கடைகள் அதிக அளவில் உள்ளன. இவ்வீதியில், மட்பாண்ட கலப்பொருள் கடை, பூ தையல் கடை, சிற்றுண்டி அகம், துணி கடை, தேநீர் கடை உள்ளிட்ட பழமை வாய்ந்த கடைகள் காணப்படுகின்றன.
இவ்வீதியில் உலா மேற்கொள்ளும் போது, சாங்காய் மாநகரின் பழம் பெருமையை உணரலாம். கிழக்கு சீனாவின் சிறிய நகரம் முது கிழக்கு சீனாவின் புகழ் பெற்ற சுற்றுலா நகரான சூசோவின் மேற்கு பகுதியில் ஒரு சிறிய நகரம் உள்ளது அதன் பெயர் முது. இந்நகரைச் சுற்றிப் பார்ப்பதற்கு ஒரு நாள் போதும்.
யெச்சியா பூங்காவுக்கான நுழைவுச் சீட்டு விலை 20 யுவான் ழன்மின்பி. கூட்டுப் பூங்கா சீட்டு வாங்கலாம். இதற்கு 50 யுவான் ழன்மின்பி. பயணிகள், நேரத்தை ஒதுக்கீடு செய்து, சென்தாங் வீதிக்குச் சென்று, புகழ்பெற்ற பேரீச்சக் கூழ் இனிப்பை உண்டால் மேலும் நல்லது. இவ்வினிப்பு வகை மிகவும் சுவையானது. முது நகரின் தனிச்சிறப்பு வாய்ந்தது.
|