• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-26 16:00:18    
நீண்ட தூரம் ஓடிய ஒரு சிறுவன்

cri

இவ்வாண்டு மே திங்கள் 2ஆம் நாள் முதல், புதியா.சிங் எனும் ஒரு இந்திய ஆண் குழந்தை திறமை மிக்க மாரதான் குழந்தை என்று அழைக்கப்படுகின்றது. பல்லாயிரம் பேர் பார்வையிட, 7 மணி நேரத்தில் 65 கிலோமீட்டர் தூரத்தை ஓடி முடித்து, ஒரு இந்திய மற்றும் உலக மாரதான் சாதனையை இந்த சிறுவன் படைத்தார். 4 வயதான புதியா இரண்டாம் நாள் விடியற்காலை 4 மணிக்கு ஓட துவங்கினார். அவர் புவனேஸ்வர் நகரப் பகுதியில் நுழைந்த போது, பாதையின் இரு பக்கங்களில் மேலும் அதிகமான மக்களும் செய்தியாளர்களும் குவிந்தனர். பார்வையாளர்களில் சிலர் வரிசையிலிருந்து முன்னே சென்று, அவருக்கு மலர் மாலைகளை அணிவிக்க முயன்றனர்.

புதியா 65 கிலோமீட்டர் தூரத்தை ஓடி முடித்த போது மிகவும் களைப்பாக இருந்தார். மருத்துவரின் ஆலோசனைக்கு இணங்க, அவர் தனது ஓட்டத்தை நிறுத்திக் கொண்டார். புதியா 7 மணி 2 நிமிடத்தில் இவ்வளவு தூரத்தை ஓடி முடித்தமை, இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலும் மிக உயர் பதிவாகும் என்று அவரது பயிற்சியாளர் பிரான்சி.டாஸ் கூறினார். அதிகாரப்பூர்வ விதிகளின் படி, மாரதான் ஓட்டத்தின் தூரம் 42 கிலோமீட்டராகும். இதற்கு முன்னதாக புதியா பல முறை ஓரே மூச்சில் 65 கிலோமீட்டர் தூரத்தை ஓடி முடித்திருந்தார்.

ஆனால் அதிகாரப்பூர்வமாக அவை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த முறை அவருடைய பெயர், இந்தியாவின் லிம்கா சாதனை நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. கின்னஸ் உலக சாதனை நூல் போல, இந்தியாவின் தேசிய அளவிலான சாதனைகள் இந்நூலில் பதிவு செய்யப்படுகின்றன. நெடுந்தூர ஓட்டத்திலான புதியாவின் திறமை எதிர்பாராதவாறு கண்டுபிடிக்கப்பட்டது. ஓரிசா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் அவர் பிறந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவருடைய தந்தை இறந்துவிட்டார். தாயார், 4 குழந்தைகளை வளர்க்க முடியாததால் அப்போது 2 வயதுக்குள்ளான புதியாவை நகரில் வாழும் ஒரு ஏழைக்கு விற்பனை செய்தார்.

அதன்பின், புதியா ஜூடோ பயிற்சி வகுப்புக்கு அனுப்பப்பட்டார். புதியா, இதர குழந்தைகளுடன் அடிக்கடிசண்டையிட்டதால், தண்டனையாக ஓடுமாறு பயிற்சியாளர் அவருக்கு கட்டளையிட்டதோடு, அனுமதி பெறாமல் ஓட்டத்தை நிறுத்தக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தார். 5 மணி நேரத்துக்கு பின், புதியா இன்னும் ஓடிக்கொண்டே இருந்ததை பயிற்சியளிப்பவர் வியப்புடன் கண்டறிந்தார். ஆனால், இவ்வளவு கடுமையான பயிற்சி, புதியாவின் உடலுக்கும் உணர்வுக்கும் ஒரு சுமையாக இருக்கும் என்று இந்தய குழந்தை உளவியல் நிபுணர்களும் குழந்தை நல மருத்துவர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.