• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-27 21:51:43    
உலக வாலிபால் சாம்பியன்சிப் போட்டிகள்

cri

வருகின்ற 31ம் நாள் முதல் டிசம்பர் 3ம் நாள் வரையிலான காலத்தில் சர்வதேச வாலிபால் கூட்டமைப்பின் சார்பில் உலக வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பானில் நடைபெறவுள்ளன.

அக்டோபர் 31ம் நாள் முதல் நவம்பர் 16 வரை பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிகளும், நவம்பர் 17ம் நாள் முதல் டிசம்பர் 3ம் நாள் வரை ஆண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிகளும் நடைபெறும். இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதிக்கட்ட போட்டிகளி ஆண்கள் பிரிவில் 24 அணிகளும், பெண்கள் பிரிவில் 24 அணிகளும் மோதுகின்றன. ஆசியா, அமெரிக்க, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய பிரிவுகளாக செயல்படும் சர்வதேச வாலிபால் கூட்டமைப்பின் வட்டார ரீதியிலான பிரிவுகளின் படி 22 நாடுகள் மற்றும் பிரதேசங்களும், கடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியை வென்ற நாடும், இப்போட்டிகள் நடைபெறும் நாடும் என 24 அணிகள் மோதுகின்றன.

இந்த வகையில் ஆண்கள் பிரிவில் ஆப்பிரிக்க வட்டாரத்திலிருந்து எகிப்து, துன்ஷியா அணிகளும் ஆசிய வட்டாரத்திலிருந்து ஜப்பான், கசகஸ்தான், சீனா, ஈரான், கொரியா, ஆஸ்திரேலிய அணிகளும், வட அமெரிக்க வட்டாரத்திலிருந்து கியூபா, கனடா, அமெரிக்கா, போர்ட்டோ ரிக்கோ, தென் அமெரிக்க வட்டாரத்திலிருந்து பிரேசில், அர்ஜென்டினா, வெனிசுவேலா அணிகளும், ஐரோப்பிய வட்டாரத்திலிருந்து ரஷ்யா, போலந்து, பிரான்ஸ், செக் குடியரசு, செர்பியா மற்றும் மாண்டநீக்ரோ, கிரேக்கம், இத்தாலி, ஜெர்மனி, பல்கேரியா அணிகளும் மோதுகின்றன.

பெண்கள் பிரிவில் ஆப்பிரிக்க வட்டாரத்திலிருந்து எகிப்து, கேமரூன், கென்யா அணிகளும் ஆசிய வட்டாரத்திலிருந்து ஜப்பான், சீனா, தைவான், கொரியா, கசகஸ்தான் அணிகளும் வட மெரிக்க வட்டாரத்திலிருந்து அமெரிக்கா, போர்ட்டோ ரிக்கோ, மெக்சிகோ, கியூபா, டொமினிக்கன் குடியரசு, கோஸ்டா ரிக்கா ஆகிய அணிகளும் தென் அமெரிக்க வட்டாரத்தில் பிரேசில் பெரு அணிகளும் ஐரோப்பிய வட்டாரத்திலிருந்து இத்தாலி, ஜெர்மனி, செர்பியா மற்றும் மாண்டநீக்ரோ, அசர்பெட்ஜான், ரஷ்யா, நெதர்லாந்து, துருக்கி, போலந்து ஆகிய அணிகளும் மோதுகின்றன.

கடந்த 2002ம் ஆண்டின் உலக வாலிபால் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற நாடுகள் ஆண்கள் பிரிவில் பிரேசில், பெண்கள் பிரிவில் இத்தாலி.