• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-31 08:47:31    
டிஜிட்டல் தொலைக்காட்டி

cri
ஐரோப்பா ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலுள்ள 101 நாடுகள் 2015ம் ஆண்டுககுள் அனலாக் தொலைக்காட்சிக்குப் பதிலாக டிஜிட்டல் தொலைக் காட்சியை ஒளிபரப்ப முடிவெடுத்துள்ளன. சீனாவிலோ இதே திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்படுகின்றது. உண்மையில் தற்போது சீனாவில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் டிஜிட்டல் தொலைக்காட்சி வழங்கும் தரமிக்க தகவல் சேவைகளை அனுபவிக்கிறார்கள். தமது தேவைக் கேற்ப டிஜிட்டல் தொலைக்காட்சி மூலம் தலைசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொருள் வாங்குதல், மருத்துவ சிகிச்சைக்காக பெயர் பதிவு செய்தல், பங்கு முதலீடு ஆகியவற்றில் அவர்கள் ஈடுபடலாம்.

தொலை காட்சியின் இலக்க முறை மயமாக்கம் என்றால் தொலை காட்சி நிகழ்ச்சிகளில் படப்பிடிப்பு, படத்தொகுப்பு, ஒளிபரப்பு ஆகிய அனைத்திலும் இலக்க முறை தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது என்று பொருள். தற்போது பயன்படும் அனலாக் நுட்பத்துடன் ஒப்பிடுகையில் டிஜிட்டல் தொலைக்காட்சி மேம்பட்டது. இவற்றில் துல்லியமான காட்சி நுட்பமான ஒலிப்பதிவு, நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். தடங்கலற்ற ஒளிபரப்பு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இரண்டாவதாக ரசிகர்கள் காட்டப்படும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை மட்டுமே கண்டு ரசிக்கும் நிலையை டிஜிட்டல் தொலைக்காட்சி மாற்றியுள்ளது. அவர்கள் இப்போது தாம் விரும்பிய தொலை காட்சி நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம். டிஜிட்டல் தொலைக்காட்சி, கணிணியின் சில பணிகளையும் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு சீனாவின் ஹாங் சோ நகரில் வாழும் முதியோர் வுகாங் சிங் புவுக்கு வயது 77. தொலைக் காட்சி பெட்டி அவருக்கும் அவர் மனைவிக்கும் நெருங்கிய பொழுதுப் போக்கு துணையாக உள்ளது என்று கூறலாம். ஓராண்டுக்கு முன் அவர்கள் டிஜிட்டல் தொலைக்காட்சியைக் கண்டு களிக்கலானார்கள். அவர் எமது செய்தியாளரிடம் கூறியதாவது

"டிஜிட்டல் தொலைக்காட்சி மூலம் நூல் தர வரிசை பட்டியலில் வெளியிடப்பட்டு ஒரு வாரத்தில் நன்கு விற்பனையாகும் நூல்களைப் பார்க்கலாம். இவற்றில் எனக்கு பிடித்தமான நூல்கள் உண்டா என்று தேடலாம். இருந்தால் டிஜிட்டல் தொலைக்காட்சி மூலம் இவற்றை விலைக்கு வாங்கலாம்"என்றார்.

கடந்த சில ஆண்டுகளில் இடைவிடா வளர்ச்சியின் விளைவாக சீன தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் செய்தி சேகரிப்பு, தயாரிப்பு, ஒளிபரப்பு ஆகியவற்றில் இலக்க முறை புகுத்தப்பட்டுள்ளது. தொலை காட்சி கண்டு ரசிப்போர் மட்டுமே அனலாக் தொலை காட்சி பெட்டிகளைப் பயன்படுத்துகின்றனர். தற்போது பல நகரங்களில் தொலை காட்சிப் பெட்டிகளும் இலக்க முறைக்கு மாற்றப்பட்டுவிட்டன. ஏற்கனவேயுள்ள அனலாக் தொலை காட்சி பெட்டியின் மேல் செட்-தொப்-பொக்ஸ் ஒன்றை வைத்து சிக்னல்களைப் பெறலாம் என்று ஹாங் சோ நகரத்தின் டிஜிட்டல் தொலைக்காட்சி நிறுவனத்தின் துணை தலைமை மேலாளர் ச்செங் சியாவ் லின் கூறினார். அவர் மேலும் கூறியதாவது

"அனலாக் தொலைக் காட்சியுடன் ஒப்பிடுகையில் டிஜிட்டல் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு வீச்சு மேலும் விசாலமானது. அனலாக் தொலைக் காட்சி மூலம் சில நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்ப முடிந்தது. டிஜிட்டல் தொலைக்காட்சியோ சில நூறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடியும். அத்துடன் அதன் தரமும் உயர்ந்தது. இதனால் தொலை காட்சி பெட்டி ஒரு எளிய கணிணி போல பயன்படுகின்றது. கண்ணியை விட எளிதாக அதை பயன்படுத்தலாம்"என்றார்.