கலை........சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் புதிய வகை நூடல்ஸ் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.
ராஜா........கலை கடந்த முறை நாம் நூடல்ஸ் கேக் பற்றி நண்பர்களுக்கு சொன்னோம். இன்றைக்கும் நூடல்ஸ் பற்றியே சொல்ல வேண்டுமா?
கலை........ஐயோ ராஜா உங்களுக்கு நூடல்ஸ் பிடிக்காதா?
ராஜா.....அப்படியில்லை. அதிகமாக நூடல்ஸ் பற்றியே பேசினால் நண்பர்களுக்கு சலித்துப் போகாதா என்று கவலைபடுகின்றேன்.
கலை......அப்படியா கவலைப்படாதீர்கள். நாம் நுணுக்கமாக விவரித்தால் சலிப்பு ஏற்படாது.
ராஜா.......ஆமாம். நூடல்ஸ் தயாரிப்பு தற்போதைய சுறுசுறுப்பான சமூகத்திற்கு பொருந்தியது. என்னை போன்ற வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இந்தியர்களுக்கு மிகவும் தேவையானது. நான் காய்கறிகளை எல்லாம் நறுக்கிப் போட்டு மசாலா சேர்த்து இந்தியாவில் கூட்டாச் சோறு சமைப்பது போல நூடல்ஸ்ஸ் சமைக்கிறேன்.
கலை......நீங்கள் சொல்வது சரிதான். இன்றைக்கு நிறைய காய்கள் வேண்டும். இன்றைய நூடல்ஸ் தயாரிப்புக்கு தேவையான பொருட்கள் முதலில் சொல்லலாமா?
ராஜா........சொல்லுங்கள்.
கலை......தினமும் நூடல்ஸ் சாப்பிடுவது கஷ்டமான வேலை அல்ல. ஆனால் எப்படி நூடல்ஸை சத்தான உணவாக மாற்றுவது என்பது லேசான வேலை அல்ல. அப்படிதானே.
ராஜா.......ஆமாம். இன்றைக்கு சமைக்க போகின்ற நூடல்ஸுக்கு தேவையான பொருட்களை பார்த்தாலே கஷ்டம் தெரியும்.
கலை....... அப்படியில்லை. தேவைப்படும் பொருட்களை பார்த்தால் தயாரிப்பது கொஞ்சம் சிக்கலாகத் தெரியும்.
ராஜா.....சரி சொல்லுங்கள்.
கலை.......நான் சொல்வேன். முதலில் காய்கள், இறால், முட்டை, காளான், மொச்சைப் பயறு ஆகியவை தேவைபடுகின்றன. ரெடிமேடு நூடல்ஸ் ஒரு பாக்கெடர். சமைப்பதற்கு தேவைப்படும் பொருட்கள் அவ்வளவு தான்.
|