இன்று சீன-இந்திய நட்புறவு ஏற்பட்ட 56ம் ஆண்டு. சீன இந்திய உறவானது நாட்டின் எல்லைப் பாதுகாப்புக்கு அரண்போல் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே தொன்மையான இலக்கியத்திலும் நாகரிகத்திலும் ஒற்றுமைகள் உள்ளன. கலாச்சாரத்தில் இரு நாடுகளும் ஒன்றுக் கொன்று மகுடமாக திகழ்கின்றன. புத்த மதம் கிருஸ்துவமதம் சமூகத்தை உலக அளவில் பரப்புவது இரு நாட்டுற்கும் மகத்தான சாதனையே.
சீன-இந்திய நட்புறவு என்பது இரு நாடுகளின் உயிர் மூச்சாகத் திகழ்கின்றது. சீன இந்திய எல்லைகோடு மற்ற நாடுகளை அணைத்து ஒட்டியதாக அமைந்துள்ளது. சீனாவின் எல்லைகோடு 12 நாடுகளின் நட்பான எல்லைக் கோடுகளுடன் சிறந்து விளங்குகின்றது.
சீனாவும் இந்தியாவும் மனித நேயம் மிக்க நாடுகள். சீனாவும் இந்தியாவும் மனித உரிமைகளின் காப்பிடம். சீன இந்திய நட்புறவு மற்ற நாடுகளுக்கு முன்மாதிரி.
கலைத் துறையிலும் வணிகத் துறையிலும் ஊரக துறையிலும் நுண்மாண் நுழைபுலத்தோடு சிறந்து விளங்கும் சீன-இந்திய நட்புறவு ஒளிவிளக்கு சீன இந்திய நட்புறவு கலங்கரை விளக்கம்.
சீனா வேளாண் துறையை முன்னேற்ற பல வகைகளில் சீர்திருத்தம் செய்து வருகின்றது. இந்தியா ஒரு வேளாண் நாடு. இந்தியாவின் உயிர் நாடியே விவசாயம். சீன பாலை நிலத்தை பயிர் நிலமாக மாற்றுகின்றது.வேளாண் வளர்ச்சிக்காக 11வது ைந்தாண்டுத் திட்டத்தில் தனிக் கவனம் செலுத்தியது.
சீன இந்திய நாடுகள் இணைந்து பணியாற்றுவதே நட்பார்ந்த உறவாகும்.
சீனா வேளாண் துறை கல்வி மற்றும் தொழில் துறையில் இந்திய தொழிலாளர்களை அழைத்து அவர்களுக்குப் பயிற்சியும் ஊக்கமும் அளிக்கலாம். தொழில் துறையில் கார் உற்பத்தி, மற்றும் கணிணி மென் பொருள் போன்ற தயாரிப்பு வேலை வாய்ப்பு பணிகளில் சீன அரசு தன் நாட்டு மக்களுடன் அங்குள்ள இந்தியத் தொழில் வல்லுனர்களையும் அமர்த்தி சீனாவில் தொழில் முன்னேற்றம் காணலாம். இதன் மூலம் பரஸ்பரம் அன்பு வெளிப்பட்டு தூதாண்மை உறவு பேணிக் காக்கப்படலாம்.
துயர் துடைப்பு வறட்சி வெள்ளம் புயல் போன்ற இயற்கைச் சீற்ற காலங்களில் பாதிக்கப்படும் பகுதிகளில் இரு நாடுகளும் துயர் துடைப்பு பணி மருத்துவம், மருத்துவர், உணவு, உடை கூடாரம் பணியாளர்களை அனுப்புதல் போன்றவற்றில் சேர்நது செயலாற்றலாம். போதை பொருள் ஒழிப்பு, வெளிநாட்டுக்கு பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் தீவிரவாத ஒழிப்பு போன்றவற்றில் இந்திய-சீன இரு நாடுகளும் இணைந்து செயலாற்றி சமூக விரோத செயல்களை ஒழிக்கப் பாடுபடுவது அவசியம்.
மேலை நாடுகள் அச்சுறுத்தலாக அமையும் போது அதன் அச்சுறுத்தலைத் தடுக்க சீனாவும் இந்தியாவும் இணைந்து செயல்படுவதைக் கண்டால் மேலை நாடுகள் மற்ற நாடுகளை அச்சுறுத்த அஞ்சும் மற்ற நாடுகளை நெருங்காது.
சமாதானம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற அடிப்படையில் ஒருவருக்கொருவர் புரிந்து செயல்பட்டால் ஒற்றுமையும் நட்பும் நம்மையும் நம் நாட்டையும் வளம் பெறச் செய்யும். அன்புடனும் சகோதரத்துவத்துடனும் கைகோர்ப்போம். வளமான நட்புறவு வளரட்டும்.
|