• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-30 18:53:17    
குவாங் சோ வர்த்தகப் பொருட்காட்சியின் வளர்ச்சி

cri

அக்டோபர் 15ம் நாள், 100வது குவாங் சோ வர்த்தகப் பொருட்காட்சி நடைபெற்றது. கடந்த 50 ஆண்டுகளில், சீனாவின் வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சியையும் வெளிநாட்டு திறப்பையும் மேம்படுத்துவதில், வரலாற்று சிறப்பு மிக்க இந்த சர்வதேச வர்த்தக பொருட்காட்சி பெரும் பங்காற்றியுள்ளது. தற்போது, சீனப்பொருளாதார ஆற்றல் தொடர்ந்து வலுப்பட்ட நிலையில், வெளிநாட்டு வர்த்தக நிலைமையின் மாற்றத்துடன் இந்த வர்த்தக பொருட்காட்சி, புதிய சீர்திருத்தத்தை எதிர்நோக்கியுள்ளது.

கடந்த நூற்றாண்டின் 50ம் ஆண்டுகளில், நவீன சீனா மீது, மேலை நாடுகள் முற்றுகை செய்தன. இந்நிலைமையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், 1957ம் ஆண்டு, குவாங்சோ நகரில் ஆண்டுக்கு இரண்டு முறை வர்த்தகப் பொருட்காட்சியை நடத்த சீன அரசு முடிவு செய்தது.

முதலாவது குவாங் சோ வர்த்தகப் பொருட்காட்சி நடைபெற்றது, நவீன சீனா வெளிநாடுகளுக்கு திறந்ததன் குறியீடுகளில் ஒன்றாகும் என்று சீன வெளிநாட்டு வர்த்தக மையத்தின் தலைவர் ZHANG ZHI GANG கருத்து தெரிவித்தார்.

இது, வர்த்தகத் தடையை முறியடிக்கும் நடவடிக்கையாகும். 1957ம் ஆண்டில், ஏற்றுமதி வர்த்தகத் தொகை, சீனாவின் அன்னிய செலாவணியில் 20 விழுக்காட்டுக்குக் கூடுதலாக இருந்தது. இந்த செயல், சீனப்பொருளாதார கட்டுமானத்துக்கு மிகவும் முக்கியமான அன்னிய செலாவணியைக் கொண்டுவந்தது. சீனாவின் அமைதித் தூதாண்மை கொள்கைகளில் முக்கிய உள்ளடக்கமாக இதைக் கூறலாம் என்று அவர் கூறினார்.

குவாங்சோ வர்த்தக பொருட்காட்சி, மேலைநாடுகளின் முற்றுகையை முறியடித்து, சீனாவுக்கும் தென்கிழக்காசிய வட்டாரத்துக்குமிடையிலும், உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் வட்டாரங்களுக்குமிடையிலும் புதிய வர்த்தகத்தை வெற்றிகரமாக திறந்து வைத்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில், குவாங்சோ வர்த்தக பொருட்காட்சி 100 முறை நடைபெற்றுள்ளது.

சீனாவின் சீர்திருத்தம் மற்றும் திறப்பு பணியுடன், குவாங் சோ வர்த்தகப் பொருட்காட்சியின் உருவாக்க வழிமுறை, காட்சிக்கு வைக்கப்படும் பொருட்கள் முதலியவற்றிலும் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. அதன் விற்பனைத் தொகை, துவக்கத்தில் இருந்த சில கோடி அமெரிக்க டாலரிலிருந்து, 99வது பொருட்காட்சியில் 32000 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

புள்ளிவிபரங்களின் படி, கடந்த 15ம் நாள் துவங்கிய 100வது குவாங் சோ வர்த்தகப் பொருட்காட்சியில், 14 ஆயிரம் தொழில் நிறுவனங்களும், சுமார் 5 லட்சம் விருந்தினர்களும் கலந்துகொண்டனர். சீனாவின் உள்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு, தன்னை வெளிக்காட்டும் அரங்கை வழங்கி, சர்வதேச சந்தையைத் திறக்கும் முக்கிய மேடையாக இப்பொருட்காட்சி மாறியுள்ளது.

2002ம் ஆண்டில், குவாங் துங் மாநிலத்தின் ச்சி கோ air conditioner தொழில் நிறுவனம் முதன் முறையாக குவாங் சோ வர்த்தகப் பொருட்காட்சியில் கலந்துகொண்டு, ஒரு கோடி அமெரிக்க டாலர் விற்பனைத் தொகையை ஈட்டியது. இது, 2001ம் ஆண்டின் ஏற்றுமதியை விட 5 மடங்கு ஆகும். இத்தொழில் நிறுவனத்தின் ஆளுனர் LI XING HAO பேசுகையில், ச்சி கோ air conditioner தொழில் நிறுவனம், இந்த வர்த்தக பொருட்காட்சியை விட்டுச்செல்ல முடியாது என்று கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:

சர்வதேச சந்தையின் வளர்ச்சியின் காரணம், குவாங் சோ வர்த்தக பொருட்காட்சியை விட்டுச்செல்ல முடியாது. இப்பொருட்காட்சி, விற்பனையை அதிகரிப்பதற்கு மிகப் பெரிய மேடையாக இருக்கிறது. குறைவான செலவில், பெரிய அளவு விற்பனை வசதி கிடைக்கிறது. இதனால், இந்த வர்த்தக பொருட்காட்சிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இப்பொருட்காட்சி மூலம், மேலும் இன்பமான எதிர்காலத்தைக் காணலாம் என்றார் அவர்.