• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-30 19:05:04    
லன்டன் ஒலிம்பிக் போட்டிகள்

cri

2012ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க லன்டன் மாநகரம் வரும் விளையாட்டு அணிகளுக்கு இவ்விளையாட்டு போட்டிகளுக்கு முன்பான பயிற்சி முகாம்களுக்கு பயன் படுத்திக்கொள்ளவென நிது உதவியை அளிக்க உள்ளதாக லன்டன் ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பு நாடுகள் அல்லது தேசிய ஒலிம்பிக் கமிட்டிகளுக்கும், மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக்கான பாரலிம்பிக் போட்டிகளுக்கான தேசிய கமிட்டிகளுக்கும் இந்த நிதி உதவி அளிக்கப்படும் எனப்படுகிறது.

மொத்தத்தில் 203 தேசிய ஒலிம்பிக் கமிட்டிகள் மற்றும் 161 தேசிய பாராலிம்பிக் கமிட்டிகள் இந்த பயிற்சிக்கான உதவித்தொகைக்கென விண்ணப்பிக்க முடியும்.

தலா 26 ஆயிரம் பவுண்ட் (6400 அமெரிக்க டாலர்) நிதி உதவி என்ற வகையில் கிட்டத்தட்ட 9 மில்லியன் பவுண்டுகளை, 22 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) அளிக்க லன்டன் ஏற்பாட்டு கமிட்டியினர் திட்டமிட்டுள்ளனர்.

இது பற்றி பேசிய 2012 லன்டன் ஒலிம்பிக் கோட்டிகளின் ஏற்பாட்டு கமிட்டியின் தலைவர் செபாஸ்டியன் கோ, ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கென விண்ணப்பித்தபோது அளித்த வாக்குறுதியின்படியே இந்த உதவித்தொகையை அளிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

2008ம் ஆணிட்லி இந்த பயிற்சி முகாம்களுக்கான இடங்கள் அறிவிக்கப்படும் என்றும், இந்த பயிற்சியில் பங்கேற்கும் அணிகளின் வீரர்கள் விராங்கனைகளுக்கு ஒலிம்பிக் போட்டிகள் துவங்குவதற்கு முன்னதாகவே பிரிட்டனின் முக்கிய இடங்கள், கலாச்சாரம், மக்கள் ஆகியவை பற்றிய முதற்கட்ட அனுபவம் பெறவும் ஏதுவாகும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.