• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-01 09:15:51    
நாளை 2

cri
விடியலுக்காக காத்திருப்பது என்பது ஷானின் மனைவிக்கும் மற்றவர்களுக்கும் அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல. நேரம் மிகவும் பயங்கரமாக ஆமை போல ஊர்ந்தது. பாவோ விடும் ஒவ்வொரு மூச்சும் ஒரு வருடத்துக்கு வரும் போலிருந்தது. ஒரு வழியாக வெளுத்து விட்டது. பிரகாசமான பகல் பகல்வெளிச்சம் விளக்கின் ஒளியை விழுங்கிவிட்டது. பாவோவின் மூக்குகள் விடைத்தன. அவன் மூச்சுவிட சிரமப்பட்டான்.

நாலாவது வீட்டு ஷானின் மனைவி அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டாள். அவளுக்குத் தெரியும். இது நல்லதுக்கு அல்ல. ஆனால் அவளால் என்ன செய்ய முடியும்? டாக்டர் ஹோவிடம் கொண்டு செல்வதே ஒரே வழி. அவள் மிகவும் சாதாரணப் பெண்ணாக இருக்கலாம். ஆனால் அவளுக்கென்று திடமான ஒரு மனம் இருந்தது. எழுந்து அலமாரியைத் திறந்தாள். இருந்த பணத்தை எல்லாம், பதின் மூன்று பெரிய வெள்ளிகளும் நூற்றி எண்பது செப்புக் காசுகளும், எடுத்துப் பையில் போட்டுக் கொண்டு, வீட்டைப் பூட்டிவிட்டு, பாவோவைச் சுமந்தபடி டாக்டர் ஹோ வீட்டுக்கு விரைந்தாள்.

அவ்வளவு சீக்கிரமாகப் போயும் ஏற்கனவே நான்கு நோயாளிகள் அங்கே உட்கார்ந்திருந்தனர். நாற்பது வெள்ளி சென்ட்டுகளைக் கொடுத்து பெயரைப் பதிந்து கொண்டாள். பாவோவின் முறை ஐந்தாவது. டாக்டர் ஹோ இரண்டு விரல்களை மட்டும் நீட்டி குழந்தையின் நாடி பிடித்துப் பார்த்தார். அவருடைய விரல் நகங்கள் நான்கு அங்குல நீளத்திற்கு வளர்ந்திருந்தன. என்னுடைய பாவோ பிழைத்துக் கொள்வான் என்று ஷானின் மனைவி உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள். அதே பதட்டம் நீங்கவில்லை. பரபரப் போடு கேட்டாள்.

"என் பாவோவுக்கு என்ன ஆச்சு டாக்டர்?"

"ஜீரணப் பாதையிலோ ஒரு தடங்கல்."

"ரொம்ப மோசமானதா? அவன் பிழைப்பானா?"

"முதல்லே இந்த இரண்டு மருந்துகளைக் கொடு."

"அவனால் மூச்சுவிட முடியலியே."

அக்கினி சக்தி உலோக சக்தியை அடக்குது.

வாக்கியத்தை முடிக்காமல் டாக்டர் ஹோ கண்களை மூடிக் கொண்டார். ஷானின் மனைவிக்கு மேற்கொண்டு எதுவும் பேசத் தோன்றவில்லை. டாக்டருக்கு எதிரே உட்கார்ந்திருந்த முப்பது வயது மதிக்கத்தக்க மனிதன் மருந்து கலந்து முடித்துவிட்டான்.

டாக்டரின் துண்டுச்சீட்டில் ஒரு மூலையில் உள்ள எழுத்துக்களைச் சுட்டிக்காட்டி, முதலில் இருப்பது குழந்தையைக் காப்பாற்றும் மாத்திரை. இது சியா வீட்டு மருந்துக் கடையில்தான் கிடைக்கும் என்றான்.

மருந்துச் சீட்டை எடுத்துக் கொண்டு ஷானின் மனைவி சிந்தித்துக் கொண்டே நடக்கத் தொடங்கினாள். அவள் ஒரு சாதாரணப் பெண்தான். ஆனாலும் டாக்டரின் வீடும் மருந்துக் கடையும் தனது வீடும் ஒரு முக்கோணம் போல் இருப்பதை அறிவாள். முதலில் மருந்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போவதே நல்லது என்று நினைத்தபடி வேகமாக நடந்தாள். மருந்துகடைப் பையன் நீண்ட விரல் நகங்களை நீட்டி சீட்டை வாங்கி, டாக்டர் எழுதியதை மெதுவாகப் படிக்கத் தொடங்கினான். பிறகு மிகவும் மெதுவாக மருந்தைப் பொட்டலம் கட்டினான். பாவோவைக் கைகளில் ஏந்தியபடி ஷானின் மனைவி காத்திருந்தாள். திடீரென பாவோ தனது சின்னக்கையை நீட்டி, தொய்வாகக் கட்டியிருந்த அவளது கொண்டையைத் தட்டிவிட்டான். கூந்தல் அவிழ்ந்து தொங்கியது. இதற்கு முன் அவன் இப்படிச் செய்ததில்லை. தாய் பயந்து போனாள்.