• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-01 10:59:44    
நிகழ்ச்சிகளைக் கேட்டு கடிதங்களை எழுதங்கள்

cri

க்ளீட்டஸ்: திண்டுக்கல் ஏ.எஸ்.சேசுராஜ் எழுதிய ஆகஸ்ட் 13ம் நாளன்றைய செய்தியறிக்கை பற்றிய கடிதம். செய்திகளில் இலங்கையில் சண்டை தொடர்ந்துகொண்டிருப்பதை கேட்டோம். 12ம் நாள் நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழர்கள் பெரும்பாலானோர் உயிர்ழந்துள்ளனர். இந்த சண்டைகள் குறைய வேண்டும், இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறோம் என்று எழுதியுள்ளார்.

வாணி: அடுத்து ஆகஸ்ட் 11ம் நாள் ஒலிபரப்பான உங்கள் குரல் நிகழ்ச்சி குறித்து கோவை காந்திபுரம் சு.சரவணமுத்து எழுதிய கடிதம். உங்கள் குரல் நிகழ்ச்சியில் திரு. எஸ். எம். ரவிச்சந்திரனின் சீனப் பயண அனுபவம் பற்றி கேட்டோம். கலையரசி, சுந்தரன் ஆகியோரது இல்லம் சென்று அவர்களது குடும்பத்தினரை சந்தித்து மகிழ்ந்தது, 11 நாடுகளின் நேயர்களோடு ஏற்பட்ட சுற்றுப் பயணத்தின் போதான அனுபவம் ஆகியவற்றை கூறியபோது மனதுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அவரது அனுபவங்களை நாங்களே அனுபவித்த உணர்வு மகிழ்ச்சி தந்தது என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து இலங்கை காத்தான்குடி நேயர் வி.துரைராஜ எழுதிய கடிதம். தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலை தமிழர்களை பெரிதும் பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 14ம் நாள் முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்ட விமான தாக்குதல்களால் அப்பாவி பிள்ளைகள் 61 பேர் பரிதாபகரமாக கொல்லப்பட்டனர். இலங்கையில் வடகிழக்கு பிரதேசங்களில் வாழும் மக்கள் பெரும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர். இலங்கை தமிழர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் யுத்த கெடுபிடிகளெல்லாம் நீங்கி, நல்லதொரு சூழல் உருவாக வேண்டும் மற்ற சமூகத்தவரை போன்றே சந்தோஷமாக வாழவேண்டும் என்பதே. இவையனைத்து காணல் நீராக காட்சியளிப்பது வேதனையளிக்கிறது என்று எழுதியுள்ளார்.

வாணி: அன்பு நேயர் துரைராஜா அவர்களே, கவலை வேண்டாம். சண்டைகளும், வேற்றுமைகளும் நீங்கி அமைதி விரைவில் திரும்பும் என்பதில் நம்பிக்கையை எப்போது இழக்காமல் இருங்கள்.அடுத்து ராசிபுரம் நேயர் எம். பி. சத்திய சுந்தரம் எழுதிய ஆகஸ்ட் 18ம் நாள் நிகழ்ச்சிகள் பற்றிய கடிதம். லெபனான் இஸ்ரேல் போர் பற்றிய செய்திதொகுப்பும், சீனா ஜப்பான் தென்கொரிய ஆகிய நாடுகளின் வரலாற்று பண்பாட்டு ஒற்றுமை குறித்த செய்தித்தொகுப்பும் கேட்டோம். அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் ரிக்ஷா இழுக்கும் ரோபோ எந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் வூ யூலு பற்றி கேட்டோம். அவரது திறமை, அவரது மனவுறுதி மற்றும் சாதனைகள் பாராட்டப்படவேண்டியவை. இதுவரை இந்த மனிதர் 26 ரோபோக்களை உருவாக்கியுள்ளார் என்பதை அறிந்தபோது வியப்பு மேலிட்டது என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து திருச்சி அண்ணா நகர் வி.டி.ரவிச்சந்திரன் எழுதிய ஆகஸ்ட் 23ம் நாள்ன்றைய நிகழ்ச்சி பற்றிய கடிதம். சீனாவில் போதைப் பொருள் தடுப்புப் பணியில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டிருப்பதை தமிழ்செல்வம் அறிஅயத்தந்தார். ஒவ்வொரு நாடும் இது போன்ற போராட்டத்தை நடத்திக்கொண்டே இருக்கின்றன. போதைப் பொருட்கள் எங்கிருந்து வருகின்றனர் என்பதை அறிந்து அந்த நாடுகள் மீது அழுத்தம் கொடுக்கவேண்டும். ஊற்றுமூலத்தை அறிந்து அதனை அடைத்துவிட்டால் பரவும் தன்மையை கட்டுப்படுத்துவது மிக எளிது. சீனா இதுபோன்ற விடயங்களில் பாரபட்சம் காட்டாமல் இருப்பதும், கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருவதும் மிகவும் சரியானதே என்று எழுதியுள்ளார்.