• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-02 19:33:53    
காஷ் நகரின் நடையுடை பாவனைகள்

cri

சிங்கியாங்கிற்கு போகாவிட்டால், சீனா எவ்வளவு பெரியது என்று தெரியாது. காஷ் நகருக்குச்செல்லாமல், சிங்கியாங்கிற்கு போவதில்லை. மேற்கு சீன எல்லைப் பகுதி நகரான காஷ், சிங்கியாங்கின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. அதற்கு வடக்கே டியென் சான் மலை. மேற்கே பாமீர் பீடபூமி. தெற்கே காளக்குரன் மலைத்தொடர். கிழக்கே டாக்லாமாக்கென் பாலைவனம் என்பன அமைகின்றன. ஒரு லட்சத்து 62 ஆயிரம் சதுரகிலோமீட்டர் நிலப்பரப்பில் சுமார் 35 லட்சம் வெவ்வேறு தேசிய இன மக்கள் வாழ்கின்றனர். அவர்களில், உயிகூர் இனத்தை மையமாகக் கொண்டு சிறுபான்மை தேசிய இன மக்கள் கூடிவாழும் வட்டாரம், இதுவாகும். இங்கு உயிகூர் இனத்தவர்கள் 90 விழுக்காடாகவும், ஹன் இனத்தவர்கள் 8 விழுக்காடாகவும் உள்ளனர். பண்டைய "பட்டுப்பாதை"யின் போக்குவரத்து மையமாகத் திகழ்ந்த காஷ், சீன மற்றும் வெளிநாட்டு வணிகர்கள் ஒன்று கூடும் சர்வதேச வணிக நகரமாகவும், கீழை-மேலைப்பண்பாடுகளின் பரிமாற்றத் தலமாகவும் திகழ்ந்து வருகின்றது. (ஒலிப்பதிவு 1) காஷ் என்பது, சீனாவின் மேற்கு முனையிலுள்ள ஒரு நகரம். பண்டைக்கால பட்டுப்பாதையின் தெற்கு கோட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகழ் பெற்ற நகரமாகும். "காஷ்க்கல்" என்பது, அதன் முழு பெயர். இதற்கு ஜேடு போன்ற இடம் என்று பொருள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சீனாவுக்கும் மேலை நாடுகளுக்குமிடையில் வர்த்தக மற்றும் பண்பாட்டுத் தொடர்பு துவங்கியதுடன், பட்டுப்பாதையில் மிகவும் சுறுசுறுப்பான ஒரு மைய நகரமாக காஷ், படிப்படியாக உருவெடுத்தது. காஷ்வை மையமாகக்கொண்டு தெற்கில் இந்தியாவும், மேற்கில் மத்திய ஆசியாவும், ஐரோப்பாவும், கிழக்கில் பட்டுப்பாதையும் ஒன்றிணைக்கப்படுகின்றன. சில பாதைகளின் சந்திப்பாகவும், ஊடு வழியாகவும் காஷ் நகரம் விளங்குகின்றது. இங்கு ஏராளமாக கிடைக்கும் பொருட்கள் வணிகர்கள் கூடுவதற்கு சிறந்த பொருளாதார அடிப்படையிட்டன. இதனால், பண்டைக்காலத்தில் காஷ் சர்வதேச சந்தையாயிற்று. பொருளாதார வளர்ச்சியால் பண்பாட்டு தொடர்பு ஏற்பட்டது.

கி.பி. பத்தாவது நூற்றாண்டில், இஸ்லாம் காஷ் வட்டாரத்துக்குள் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே, காஷ் வட்டாரப் பண்பாட்டில் இஸ்லாமிய தனித்தன்மை செறிந்து காணப்படுகிறது. உயிகூர் பண்பாட்டின் தோற்றுவாயிலாக இப்பிரதேசம் திகழ்கின்றது. காஷ் சாலைகளில் கட்டிடங்களும், மக்களின் ஆடைகளும் சுத்தமான உயிகூர் தனித்தன்மையையும் இஸ்லாமிய பாணியையும் பிரதிபலிக்கின்றன. இங்கு வரலாற்று, பண்பாட்டு வளங்கள் செழித்து, மக்களின் பழக்க வழக்கங்கள் மாறுபட்டதாக, "நீண்டகாலத்திற்கு பேணிக்காக்கப்பட வேண்டிய ஒரு முத்து" என, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அறிஞர்கள் காஷ் நகரைப் போற்றுகின்றனர். பயணிகள், இந்நகரின் ஈர்ப்பு சக்தியை போதிய அளவில் உணர்ந்து கொள்ளும் வகையில், நீண்டகாலமாக உள்ளூர் அரசு, இங்குள்ள செழிப்பான சுற்றுலா வளங்களைப் பயன்படுத்த பாடுபட்டு வருகின்றது. காஷ் நகரின் மேற்குப் புறநகரில் உள்ள மக்கள் பண்பாட்டுப் பூங்கா, கடந்த ஆண்டு காஷ் நகராட்சி அரசு புதிதாக துவக்கி வைத்த சிறப்பு சுற்றுலா நிகழ்ச்சியாகும். இங்கு பயணிகள், டவாஸ் அரங்கேற்றத்தையும் உயிகூர் இன ஆடல்பாடலையும் கண்டுகளிக்கலாம். உயிகூர் இன மொழியில் "டவாஸ்" என்பது, நடுவானில் கயிற்றின் மீது நடப்பது என பொருள்படுகின்றது. கயிறு மீது நடப்பது உயிகூர் இன மக்கள் மிகவும் விரும்பும் பாரம்பரிய விளையாட்டு ஆகும். எமது செய்தியாளர் மக்களின் பண்பாட்டுப் பூங்காவுக்குச் சென்ற போது, டவாஸ் அரங்கேற்றம் துவங்கியது. 

எட்டு அல்லது 9 மீட்டர் உயரமுடைய இரண்டு மரத்தூண்களுக்கு இடையில், உருண்டையான சணல் கயிறு ஒன்று கட்டப்பட்டது. பத்து வயதுக்கும் மேற்பட்ட ஒரு உயிகூர் இன சிறுமியும், அவளை விட வயதில் சிறிய ஒரு சிறுவனும் மாறி மாறி இந்த கயிற்றின் மீது நடந்து ரசிகர்களை மகிழச் செய்கின்றனர். உயிகூர் இன முதியோர்கள் பலர், சுற்றிலும் அமர்ந்து கைக்கொட்டுகளை முழக்கி அவர்களை உற்சாகப்படுத்துகின்றனர். ரசிகர்கள், கரவொலி எழுப்பி மகிழ்ச்சிக்கடலில் மூழ்கியிருக்கின்றனர்! 14 வயதான சிறுமி அயி ஜெமாலி, தாம் 6 வயதிலிருந்தே டவாஸைப் பயிற்சி செய்யத் துவங்கியதாகவும், ஆசிரியர்களின் வழிகாட்டலில் நாள்தோறும் காலை 6 மணிக்கு படுக்கையிலிருந்து விழுந்திருந்து பயிற்சியில் ஈடுபடுவதாகவும் அவர் சொன்னார். பணி கடினம் என்ற போதிலும் அதன் மீது பெரும் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னாள். அவர் கூறியதாவது: தலைசிறந்த டவாஸ் வல்லுநராக வேண்டும். அதன் மூலம் தான், சொந்த தேசிய இனத்தின் இத்தகைய பாரம்பரிய கலையை வெளிப்படுத்த முடியும். எங்கள் உயிகூர் இனத்தின் டவாஸ் கலையை உலகம் முழுவதுக்கும் அறிவிக்க வேண்டும் என்றார், அவள். காஷ் நகரின் சேமான் என்னும் சாலையில், உயிகூர் இனத்தவர்களின் பழக்க வழக்கம் கமழும் வீதி ஒன்று இருக்கின்றது. இங்குச் சென்றால், பாரம்பரிய கைவினைத் தரைக்கம்பளம், தறிநெசவுத்துணிகள், ஆட்டுக்கம்பளி போர்வை, மட்பாண்டம், மரக்கலந்தி, வாள், செம்பு கருவி, தொப்பி தயாரிப்பு ஆகியவை உட்பட, பாரம்பரிய கைவினைக் கலைக்காட்சியை நேரில் காணலாம்.  இவ்வீதியின் நிர்வாகப் பணிக்குப் பொறுப்பான மேலாளர் செள காங் உற்சாகத்துடன் செய்தியாளர்களுடன் சேர்ந்து பயணமானார். உயிகூர் இன மகளிர் அணியும் முக்காடு அங்கி பற்றியும், இதர உயிகூர் இன கைவினை பொருட்களை தயாரிக்கும் கலை பற்றியும் எங்களுக்கு விவரமாக விளக்கினார். இரவு நேர காஷ் நகரம், இம்மேற்கு பகுதியிலுள்ள எல்லைப்புற நகரத்தின் மற்றொரு காட்சியை மக்களுக்கு வழங்கியது. இரவு வந்ததும், காஷ் நகர மையத்தில் அமைந்துள்ள சீனாவின் மிகப் பெரிய மசூதியான எடிக்கார் மசூதிக்கு முன்னால் உள்ள சதுக்கம், ஓய்வு எடுக்கவும் பொழுதுபோக்கவும் மக்கள் செல்லும் சிறந்த இடமாகியுள்ளது. 

இச்சதுக்கத்திலும் அதன் பக்கத்திலுள்ள வீதிகளிலும், குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான பூங்கா இருக்கின்றது. உள்ளூரில் பல்வேறு சுவைப்பொருட்கள் விற்கப்படும் இரவுச் சந்தை, பல்வகை பொருட்களை விற்கும் சில்லறை விற்பனைச் சந்தை, பயணிகள் படம்பிடிக்க, மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ள ஒட்டகங்கள் ஆகியவை நிறைய காணப்படுகின்றன. மக்கள் அணியும் ஆடைகள் மூலம் உயிகூர் இனத்தவர்கள், ஹன் இனத்தவர்கள், இதர சிறுபான்மை தேசிய இன மக்கள் ஆகியோரை தனித்தனியே அடையாளம் காணலாம். தவிரவும், பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பயணிகளும் இங்கு இருக்கின்றனர். நள்ளிரவிலும், சதுக்கத்திற்கு மக்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். அவர்களின் உற்சாகமான உல்லாசம் குறையவில்லை. காஷ் நகரில் இணக்கமும் அழகும் தழுவிய இரவுக் காட்சியில் மக்கள், வாழ்க்கையின் அறுமையையும் இன்பத்தையும் ஆசை தீர அனுபவிக்கின்றனர்.