• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-02 19:40:36    
ஜுங்முலோங்மா மலை சிகரத்தில் ஏறிய கால் இல்லாத வீரர்

cri

பி.பி.சி அறிவித்த ஒரு செய்தியின் முதல் பகுதியை இப்பொழுது வழங்குகின்றோம். நியூசிலாந்தைச் சேர்ந்த 47 வயது மார்க். இங்கலிஸ் என்பவர் செயற்கைக் கால்களுடன் 8850 மீட்டர் உயரமுடைய ஜுங்முலோங்மா மலை சிகரத்தில் வெற்றிகரமாக ஏறியுள்ளார். அவர் ஒரு விபத்தில் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டு ஊனமுற்றார், அவர் செயற்கை கால்களுடன் ஜூங்முலோங்மா மலை சிகரத்தில் வெற்றிகரமாக ஏறிய முதலாவது ஊனமுற்ற வீரராக வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். மார்க். இங்கலிஸ், முதலில் நியூசிலாந்தின் மிக உயரமான குக் மலை சிகரத்துக்கு அருகில் உள்ள ஒரு மலை ஏற்ற மீட்புதவி குழுவில் வழிகாட்டியாகப் பணியாற்றினார்.

ஆனால் 1982ஆம் ஆண்டு மலை ஏறிய போது எதிர்பாராதவாறு நிகழ்ந்த ஒரு விபத்தில் சிக்கி, அவர் இரண்டு கால்களையும் இழந்தார். அப்போது, அவர் தனது கூட்டாளியான பிலீப்ஸ்.தூருடன் மலையில் ஏறிய போது, திடீரென்று வானிலை மோசமடைந்தது. அவர்கள் இருவரும் ஒரு சிறிய பனிக் குகையில் 13 நாட்களாக சிக்கித் தவித்தனர். கட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு பின், மீட்புதவி குழு அவர்களைக் காப்பாற்றியது. குளிர் காற்றால் தாக்கப்பட்டதால் சில கால் விரல்கள் மட்டுமே துண்டிக்கப்படும் என அவர்கள் நினைத்தனர்.

ஆனால், உண்மையில், இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும், அவர்களின் கால்கள் அழுகிவிட்டதால் அவை துண்டிக்கப்பட வேண்டும் என்று மருத்துவர் கூறிவிட்டார். இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட பின்னர், நீண்டகாலம் மீட்பு பயிற்சியில் மார்க் ஈடுபட்டார். தலைவிதியால் ஆட்டிப்படைக்கப்பட விரும்பாத மார்க் தனக்கு இரண்டு செயற்கை கால்களை பொருத்தி, மலை ஏற்றப் பயிற்சியை மீண்டும் துவங்கினார். இவை அனைத்துக்கும் விளக்கம் தர முடியாது, துவக்கத்தில் நான், கார் மூலம் மலை அடிவாரத்திற்குச் சென்று, ஒவ்வொரு மலை சிகரத்தையும் தூரத்திலிருந்து பார்த்தேன்.

ஒவ்வொரு செங்குத்தான பள்ளத்தாக்கும் வேறுபட்டதாக இருக்கின்றது என்பது எனக்கு தெரியும், எனது மனம் துடிக்கின்றது. இந்த மலை சிகரங்களைப் பற்றி, கூடிய அளவில் நான் அறிந்துகொள்ள விரும்பினேன் என்று மார்க் கூறினார். மார்க் செயற்கை கால்களுடன் ஒவ்வொரு மலை சிகரமாக ஏறத் துவங்கினார். 2004ஆம் ஆண்டு, மார்க் சிறப்பாக தயாரிக்கப்பட்ட செயற்கைக் கால்களைப் பொருத்தி, இமய மலையின் 8201 மீட்டர் உயரமுடைய ஓயூ மலை சிகரத்தில் வெற்றிகரமாக ஏறினார்.

மேலே நீங்கள் படித்தது இந்த செய்தியின் முதல் பகுதி. இரண்டாம் பகுதியை அடுத்த முறை நீங்கள் படிக்கலாம்.