• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-09 10:35:57    
கால் இல்லாத வீரர்

cri

பி.பி.சி அறிவித்த செய்தியின் இரண்டாம் பகுதியை வழங்குகின்றோம். அப்போது அவர் தூரத்தில் இருந்து, ஜுங்முலோங்மா சிகரத்தை நோக்கிப் பார்த்து, அதை தனது இறுதி இலக்காக உறுதிப்படுத்தினார். இவ்வாண்டு துவக்கத்தில், ஜுங்முலோங்மா சிகரத்தில் ஏற ஆயத்தம் செய்ய துவங்கினார். அப்போது, குழாயிலிருந்து வெளியே எடுத்து உண்ணக் கூடிய ஒரு வகை சிறப்பு உணவை அவர் கண்டறிந்தார். மே திங்கள் 15ஆம் நாள் காலை மார்க் கடினமான உழைப்பு மற்றும் ஒரு ஜோடி செயற்கை கால்களின் உதவியுடன், 8850 மீட்டர் உயரமுடைய ஜுங்முலோங்மா சிகரத்தில் வெற்றிகரமாக ஏறினார்.

சற்று நேரத்துக்குப் பின், அவர் இந்த மகிழ்ச்சியூட்டும் தகவலை தொலைபேசி மூலம் நியூசிலாந்திலுள்ள தனது மனைவியிடம் தெரிவித்தார். அத்துடன் தாம், நான்காவது ஆய்வு முகாமுக்கு திரும்பியதாகவும் அவர் கூறினார். தொலைபேசி ஒலி தெளிவாகக் கேட்காததால், கணவன் ஜுங்முலோங்மா சிகரத்தில் வெற்றிகரமாக ஏறிய சரியான நேரத்தை மனைவியால் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் அது சரியான நண்பகல் காலம் தான் என்று அவர் கூறினார்.

செயற்கை கால்களுடன் மலை ஏறும் போது, விபத்து நிகழக் கூடும் என எதிர்பார்த்து வேறு சில செயற்கைக் கால்களையும் தயாரித்து வைத்திருந்தார். ஆனால் அவற்றை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை. அவர் சிகரத்தின் உச்சியில் வெற்றிகாரமாக ஏறினார். அவருடைய செயற்கை கால்களில் எந்த பிரச்சினையும் இல்லை என்று அவருடைய மனைவி அன்னீ கூறினார். தனது கணவனின் சாதனையைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையுடனும் இருக்கின்றார்.

அவர் பாதுகாப்பாக வீடு திரும்பிய போது தாம் மேலும் மகழ்ச்சி கடலில் மூழ்கியதாக அன்னீ பி.பி.சி செய்தியாளரிடம் தெரிவித்தார். இதற்கு முன்பு வேறு எவரும் செயற்கை கால்களுடன் ஜூங்முலோங்மா சிகரத்தில் ஏற முயற்சிக்கவில்லை. எனவே, வரலாற்றில் இந்த சிகரத்தில் வெற்றிகரமாக ஏறிய முதலாவது கால்கள் ஊனமுற்ற வீரராக அவர் மாறினார். இத்துடன் பி.பி.சி அறிவித்த செய்தி முழுவதையும் நீங்கள் படித்தீர்கள்.