• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-22 11:17:13    
யிசிங் நகரம்

cri

சீனாவின் தைய்வு என்னும் எழில்மிக்க ஏரியின் மேற்கு கரையோரத்தில், ச்சியாங்சு, செக்கியாங், அன்ஹுவெய் ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் முத்து ஒன்று ஒளிவீசுகின்றது.

பண்டைக்காலத்தில், யாங்சியெ என அது பெயர் பெற்றிருந்தது. சமகாலத்தில், இது, மட்பாண்ட வள நகரான யிசிங் ஆகும். யிசிங்கில் மட்பாண்டப் பொருட்களைக் கட்டாயம் காண வேண்டும். பண்டைக்காலம் தொட்டு, மட்பாண்டப் பொருளை உற்பத்தி செய்வதினால் யிசிங் பிரபலமாக விளங்குகின்றது.

இன்று, ஊதா நிற மட்பாண்டம், பச்சை நிற மட்பாண்டம், செம்மையான மட்பாண்டம் உள்ளிட்ட 5 வகை மட்பாண்டங்கள், வெளிநாட்டிலும் புகழ்பெற்றுள்ளன. நகரிலுள்ள மட்பாண்டங்கள் மற்றும் பீங்கான் பொருட்கள் காட்சியகம் மூலம், சீயநாவின் மட்பாண்ட பண்பாட்டை அறிந்துகொள்ளலாம்.

மட்பாண்ட மற்றும் பீங்கான் பொருட்களைப் பெரிதும் விரும்பினால், உள்ளூரிலுள்ள பிரபலமான மட்பாண்ட மற்றும் பீங்கான் ஊதா நிற மட்பாண்ட கிராமத்தைப் பார்வையிட்டு வாங்கலாம். கேட்பதை விட பார்ப்பது மேலானது என்று சீன பழமொழி ஒன்று கூறுகின்றது. விருந்தோம்பல் மிக்க யிசிங் மக்கள், தங்களின் வருகையை எதிர்பார்க்கின்றனர்.